ஒரு அடி, ஒரு மன்னிப்பு. பயிற்சி போட்டியில் இந்திய வீரர்களுக்கிடையே நடந்த 2 சம்பவங்கள் – விவரம் இதோ

Rohit Shamra Shami Pujara County Match
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அதன் சொந்த மண்ணில் வரும் ஜூலை 1-ஆம் தேதி களமிறங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ளது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டு மண்ணைக் கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.

எனவே இப்போது நடக்கும் கடைசி போட்டியில் வெல்ல இரு அணிகளும் தீவிரமாக போராட உள்ளனர். மிகுந்த சவாலாக இருக்கப் போகும் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக ஏற்கனவே இங்கிலாந்து பறந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் அங்கு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

சூப்பர் போட்டி:
அதன் ஒரு பகுதியாக லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக ஜூன் 23இல் துவங்கிய 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. அப்போட்டியில் இந்தியாவுடன் போட்டியிடும் அளவுக்கு ஒருசில தரமான வீரர்கள் குறைவாக இருந்த காரணத்தாலும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அத்தனை பேரும் களமிறங்கி பயிற்சி எடுக்கும் வகையிலும் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, செதேஷ்வர் புஜாரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக களமிறங்கியது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இருப்பினும் பேட்டிங்கில் சுமாராகவே செயல்பட்ட இந்திய அணியினர் முதல் இன்னிங்சில் 246/8 என தடுமாறிக் கொண்டிருந்தபோது டிக்ளேர் செய்வதாக ரோகித் சர்மா தெரிவித்தார். ரோகித் சர்மா 25, சுப்மன் கில் 21, விராட் கோலி 33, ஹனுமா விஹாரி 3, ஷ்ரேயஸ் ஐயர் 0, ரவீந்திர ஜடேஜா 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் தடுமாறி அவுட்டான நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேஎஸ் பரத் 70* ரன்கள் எடுத்தார். லீசெஸ்டர்ஷைர் சார்பில் அதிகபட்சமாக ரோமன் வால்க்கர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் 170/6 என்ற கணக்கில் லீசெஸ்டர்ஷைர் விளையாடி வருகிறது.

- Advertisement -

மேலும் 2 நிகழ்வுகள்:
இப்போட்டியில் இந்திய வீரர்கள் எதிரெதிர் அணியில் கலந்து விளையாடுவதால் ரசிகர்கள் எதிர்பாராத ஒரு சில நிகழ்வுகள் நடந்தேறி வருகிறது. அதில் முதல் நாளில் ஷ்ரேயஸ் ஐயரை எப்படி அவுட் செய்யலாம் என்று விராட் கோலியிடம் ஆலோசனை கேட்டு பிரசித் கிருஷ்ணா அவரை டக் அவுட் செய்தது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

ரோஹித் – பும்ரா: அதன் ஒரு பகுதியாக இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிராக ஜஸ்பிரித் பும்ரா பந்துவீயதைப் பார்க்கும் பொன்னான வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்தது. ஏனெனில் இந்தியாவுக்கும் ஐபிஎல் தொடரிலும் ஒரே அணியில் விளையாடும் அவர்கள் இப்போதுதான் எதிரெதிர் அணியில் மோதுகிறார்கள். அந்த நிலைமையில் இப்போட்டியின் முதல் நாளில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய 7-வது ஓவரின் 3-வது பந்து அதை எதிர்கொண்ட ரோகித் சர்மாவின் சிறுநீரக பகுதியில் பட்டது.

- Advertisement -

அதனால் ஒருசில நிமிடங்கள் வலியால் துடித்த அவர் தாங்க முடியாமல் மைதானத்திலேயே அமர்ந்தார். அப்போது இதர லீசெஸ்டர்ஷைர் அணி வீரர்களும் ஜஸ்பிரித் பும்ராவும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் எதிரணியில் விளையாடினாலும் ரிஷப் பண்ட் மட்டும் வந்து நலம் விசாரிக்க இடையே மருத்துவர் வந்து ரோகித் சர்மாவை பரிசோதித்தார். நல்லவேளையாக பெரிய அளவில் காயத்தை சந்திக்காத அவர் அதன்பின் பேட்டிங் செய்து 25 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

2. மன்னிடுச்சுடு நண்பா: அதேபோல் 2-வது நாளில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக பேட்டிங் செய்ய களமிறங்கிய சீனியர் இந்திய வீரர் புஜாராவை இந்திய பவுலர் முகமது சமி தனது அற்புதமான வேகப்பந்து வீச்சால் போல்ட்டாக்கி டக் அவுட் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தார். அதை வழக்கம்போல கொண்டாடிய அவர் மன்னிச்சிடு நண்பா என்ற வகையில் புஜாராவிடம் ஒருசில ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி அவரின் முதுகை தட்டிக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க : 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்லுக்கு அடித்த அதிர்ஷ்டம் – நல்லா காத்து வீசுது

கடந்த சில வருடங்களாக சதங்கள் அடிக்க முடியாமல் சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரில் அதிரடியாக நீக்கப்பட்ட புஜாரா கடந்த மாதம் இதே கவுண்டி அணியில் அடுத்தடுத்த சதங்களை அடித்து ஃபார்முக்கு திரும்பி இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். ஆனால் இந்த பயிற்சி போட்டியில் டக் அவுட்டானது மீண்டும் அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement