5 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்லுக்கு அடித்த அதிர்ஷ்டம் – நல்லா காத்து வீசுது

Maxwell
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரரான கிளன் மேக்ஸ்வெல் டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என இரண்டிலும் ஆஸ்திரேலிய அணிக்காக மேட்ச் வின்னராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகிய அவர் இதுவரை 120 ஒருநாள் போட்டிகளிலும், 87 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அவரது அதிரடியான ஆட்டத்திற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர்.

Maxwell

- Advertisement -

பேட்டிங்கில் அதிரடி காட்டும் மேக்ஸ்வெல் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் இருப்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி ஆல்-ரவுண்டராக இருக்கிறார். தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் முக்கிய வீரராக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வளவாக சிறப்பான செயல்பாட்டினை அளிக்கவில்லை.

ஆம், இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் ஒரு சதம் உட்பட 339 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதிலும் கடந்த 2017-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் அதன் பிறகு ஐந்து ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காமல் இருந்து வந்தார்.

Maxwell 1

இந்நிலையில் தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கான அணியில் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

அதன்படியே வெளியான தகவலின் படி : டிராவிஸ் ஹெட் ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக காயம் அடைந்ததால் அவர் இந்த எஞ்சியுள்ள ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதாகவும் அதற்கு பதிலாக மேக்ஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் வலுவான டீம், ஆசிய கோப்பையை வென்று உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடிக்கும் – முன்னாள் பாக் வீரர் உறுதி

கடந்த சில மாதங்களாகவே அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் மேக்ஸ்வெல் மீண்டும் தனது பேட்டிங் மூலம் அணிக்கு பெருமளவு பங்களித்து வருவதால் தற்போது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் 5 ஆண்டுகள் கழித்து இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement