இங்கிலாந்து தொடரில் கேஎல் ராகுலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது.. ராகுல் டிராவிட் வெளிப்படையான அறிவிப்பு

Rahul Dravid
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்கியது
. அந்தத் தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து சாதனை படைக்கும் லட்சியத்துடன் இங்கிலாந்து களமிறங்குகிறது. அதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வென்று தங்களை சொந்த ஊரில் கில்லி என்பதை நிரூபிக்க இந்தியா தயாராகியுள்ளது.

அந்த வகையில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளில் விலகிய விராட் கோலிக்கு பதிலாக களமிறங்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே போல இந்த தொடரில் முக்கியமான விக்கெட் கீப்பர் இடத்தில் விளையாடப் போவது யார் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனெனில் ரிசப் பண்ட் காயமடைந்ததால் வாய்ப்பு பெற்ற கேஎஸ் பரத் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

டிராவிட் அறிவிப்பு:
அதே போல இஷான் கிசானும் பெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் முழுமையாக தன்னுடைய தரத்தை நிரூபிக்கவில்லை. அதனால் கடந்த 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடி கடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் சாவலான சூழ்நிலைகளில் அட்டகாசமான சதமடித்து அசத்திய கேஎல் ராகுல் இத்தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். அந்த இடத்துக்கான தேர்வில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அந்த சூழ்நிலையில் எங்களின் தேர்வுக்கு மேலும் 2 விக்கெட் கீப்பர்கள் தயாராக இருக்கின்றனர்”

- Advertisement -

“கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் ராகுல் மிகச் சிறப்பான வேலையை செய்து தொடரை சமன் செய்வதில் முக்கிய பங்காற்றினார். ஆனால் இந்தியாவில் இருக்கும் சூழ்நிலைகளில் நடைபெறும் இந்த 5 போட்டிகளை கருத்தில் கொள்ளும் போது கீப்பருக்கான வாய்ப்பு மற்ற 2 வீரர்களுக்கே கொடுக்கப்படும். குறிப்பாக இந்தியாவில் இருக்கும் மைதானங்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் துல்லியமாக பந்து வீசுவார்கள்”

இதையும் படிங்க: ரிங்கு சிங்கை இனி நாம டெஸ்ட் போட்டியிலும் பாக்க வாய்ப்பிருக்கு.. அதற்காக பி.சி.சி.ஐ – எடுத்துள்ள நடவடிக்கை

“அப்போது சரியாக ஸ்டம்பிங் செய்வதற்கு முழுமையான விக்கெட் கீப்பர் அவசியம்” என்று கூறினார். அதாவது பகுதி நேர விக்கெட் கீப்பரான கேஎல் ராகுல் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் தடுமாறுவார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். எனவே இந்த தொடரில் இசான் கிசான் அல்லது கேஎஸ் பரத் ஆகியோர் விக்கெட் கீப்பராக விளையாடுவார்கள் என்றும் ராகுல் முழுமையான பேட்ஸ்மேனாக மட்டும் செயல்படுவார் என்றும் டிராவிட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement