ரிங்கு சிங்கை இனி நாம டெஸ்ட் போட்டியிலும் பாக்க வாய்ப்பிருக்கு.. அதற்காக பி.சி.சி.ஐ – எடுத்துள்ள நடவடிக்கை

Rinku-Singh
- Advertisement -

இந்திய அணியின் இளம் இடதுகை அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அந்த வகையில் இந்திய அணிக்காக இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அதோடு நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கூட அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

இப்படி அடுத்தடுத்து ரிங்கு சிங்கின் செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்து வரும் வேளையில் விரைவில் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாய்ப்பினை பெற்றால் அதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி அசத்திய ரிங்கு சிங் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காக 44 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடி 57 ரன்கள் சராசரியுடன் 3109 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் ஏற்றவாறு தன்னால் விளையாட முடியும் என்பதை ஏற்கனவே அவர் நிரூபித்திருக்கும் வேளையில் விரைவில் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம் பெறுவதற்கான முன்னேற்பாடுகளை பிசிசிஐ செய்ய முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது 26 வயதான அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நாளை ஜனவரி 24-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற உள்ள பயிற்சி போட்டிக்கான இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : நான் எதுக்கு அடங்கணும்? அவருடைய பலத்தை வைத்தே ரோஹித்தை சாய்ப்பேன்.. மார்க் வுட் பேட்டி

இப்படி இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ள அவர் அங்கும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் விரைவில் அவரை டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement