நான் எதுக்கு அடங்கணும்? அவருடைய பலத்தை வைத்தே ரோஹித்தை சாய்ப்பேன்.. மார்க் வுட் பேட்டி

Mark Wood
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தொடரில் இங்கிலாந்தை தோற்கடித்து கடந்த 12 வருடங்களாக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இந்தியா தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக ரன்கள் குவிக்கும் அதிரடியான அணுகு முறையை பயன்படுத்தி இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு கை பார்க்க உள்ளோம் என்று இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் சவால் விடுத்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு வெற்றிகளில் பங்காற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

பலத்தை பயன்படுத்தி:
ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் 2021 சென்னை, 2023 நாக்பூர் டெஸ்ட் போல சுழலுக்கு சாதகமான மைதானங்களில் எதிரணி பவுலர்களை அட்டாக் செய்து வேகமாக ரன்களை குவித்து தாக்கத்தை ஏற்படுத்தும் திறமையைக் கொண்டுள்ளார். இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளை அசால்டாக ஃபுல் ஷாட் வாயிலாக சிக்ஸராக பறக்க விடுவது ரோகித் சர்மாவின் பலமாக இருப்பதை அனைவரும் அறிவோம்.

ஆனால் அவர் அடிப்பார் என்பதற்காக இத்தொடரில் தாம் அடங்கி ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசாமல் இருக்கப் போவதில்லை என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் அந்த பலவீனத்தை வைத்து ரோகித் சர்மாவை சாய்க்கும் திட்டத்தை வைத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மைதானத்திற்கு சென்றதும் அங்குள்ள சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பதை நான் பார்ப்பேன்”

- Advertisement -

“பவுன்சர் பந்துகள் அரிதாக வீசப்படும் இந்தியாவில் அதை வீசுவதற்காக நான் இங்கே இருக்கிறேன். குறிப்பாக ரோகித் சர்மா ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் தரமானவர் என்பதை நான் அறிவேன். அதற்காக அவருக்கு எதிராக நான் பவுன்சர் பந்துகளை வீசக்கூடாது என்று அர்த்தமல்ல. எனவே சரியான நேரத்தில் துல்லியமாக அதை நான் வீசுவேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பதில் சொல்லாததால் வெறியாகி ஆண்டர்சனை தெறிக்க விட்டோம்.. 2021 லார்ட்ஸ் டெஸ்டின் பின்னணியை பகிர்ந்த பும்ரா

முன்னதாக ரோகித் சர்மாவும் சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்முடைய பலமான ஷார்ட் பிட்ச் பந்துகளை சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்து வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளை வீசுவேன் என்று மார்க் வுட் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்குகிறது.

Advertisement