பதில் சொல்லாததால் வெறியாகி ஆண்டர்சனை தெறிக்க விட்டோம்.. 2021 லார்ட்ஸ் டெஸ்டின் பின்னணியை பகிர்ந்த பும்ரா

Bumrah and Anderson
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரில் அதிரடியான அணுகுமுறையை பயன்படுத்தி இங்கிலாந்து வெல்லுமா அல்லது தங்களுடைய சொந்த மண்ணில் வழக்கம் போல அபாரமாக செயல்பட்டு 12 வருடங்களாக தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இந்தியா தக்க வைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக உலகின் டாப் 2 அணிகளான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நிறைய மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 2021ஆம் ஆண்டு கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் 151 ரன்கள் வித்தியாசத்தில் விராட் கோலி தலைமையிலான இந்தியா வீழ்த்தியதை மறக்க முடியாது.

- Advertisement -

பதில் சொல்லல:
அதை விட அந்த போட்டியின் ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்துக்கு அன்றைய நாள் முடியக்கூடிய சமயத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் செய்து கடைசி விக்கெட்டை விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார். இருப்பினும் அப்போது எப்படியாவது விக்கெட் எடுக்க வேண்டும் என்று நினைத்த ஜஸ்பிரித் பும்ரா அதிரடியான பவுன்சர் வேகப் பந்துகளால் ஆண்டர்சனை அச்சுறுத்தினார்.

ஒரு கட்டத்தில் அந்த நிகழ்வு மோதலாக மாறியதால் ஒரே ஓவரில் சில நோ பால்களையும் சேர்த்து பும்ரா எக்ஸ்ட்ராவாக வேண்டுமென்றே பவுன்சர் பந்துகளை வீசி ஆண்டர்சனை தெறிக்க விட்டது ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் அந்தப் போட்டியில் ஒரு பந்து உடலில் பட்ட போது அருகே சென்று “உங்களுக்கு எதுவும் ஆகவில்லையே” என்றும் ஆண்டர்சனிடம் மரியாதையுடன் கேட்டதாக பும்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அதற்கு ஆண்டர்சன் பதில் மரியாதைக்கு கூட எதுவுமே சொல்லாததால் மொத்த அணியும் வெறித்தனமாக மாறி அப்போட்டியில் வெல்லும் உத்வேகத்தை பெற்றதாக பும்ரா கூறியுள்ளார். இது பற்றி கார்டியன் பத்திரிகையில் அவர் பேசியது. “அப்போது சோர்வடைந்திருந்த நான் கடைசி விக்கெட் மட்டுமே இருந்ததால் சற்று கூடுதல் வேகத்துடன் வீசினேன். அதற்கிடையே அவருடைய அருகே சென்ற நான் நீங்கள் நன்றாக தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் வரவில்லை”

இதையும் படிங்க: அவர் இல்லாததை பயன்படுத்தி இந்தியாவை அவங்க ஊரிலேயே.. இங்கிலாந்துக்கு தோற்கடிக்கும்.. நாசர் ஹுசைன் நம்பிக்கை

“அந்த இடத்தில் நான் அன்பானவனாக இருக்க முயற்சித்தும் அதை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அது மொத்த அணியையும் தூண்டி விட்டது. இருப்பினும் இந்த சமயத்தில் ஆண்டரசனுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவரை நான் சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்தேன். 41 வயதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அவரிடம் பசி மற்றும் ஆர்வம் இருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement