அவர் இல்லாததை பயன்படுத்தி இந்தியாவை அவங்க ஊரிலேயே.. இங்கிலாந்துக்கு தோற்கடிக்கும்.. நாசர் ஹுசைன் நம்பிக்கை

Nasser Hussain
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. அதில் சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு சவாலாக இந்தியாவை 2012க்குப்பின் அதன் சொந்த ஊரில் வீழ்த்தும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல பேட்டிங் செய்து தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் அந்த அணியால் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்தியாவை வீழ்த்த முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் இருக்கிறது. முன்னதாக இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முகமது ஷமி காயத்தால் விலகியது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இங்கிலாந்துக்கு வாய்ப்பு:
ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் கண்டிப்பாக இங்கிலாந்துக்கு சவாலை கொடுப்பார். அவரை விட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் சொந்த காரணங்களுக்காக வெளியேறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு மற்றுமொரு ஏமாற்றமாகவும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில் முதல் 2 போட்டியில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பான விராட் கோலி விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கான வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாக முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். எனவே அதை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே வென்று இங்கிலாந்து முன்னிலை பெறும் என்று நம்புவதாக கூறும் அவர் இது பற்றி டெய்லி மெயில் பத்திரிகையில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி நன்றாக இருக்க வேண்டும் என நாம் வாழ்த்த வேண்டும் என்பதே அந்த அறிவிப்பின் போது என்னுடைய முதல் எண்ணமாக இருந்தது. ஹரி ப்ரூக் போலவே அவரும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். அதை இந்த விளையாட்டு மதிக்க வேண்டும். சில நேரங்களில் கிரிக்கெட்டை விட உங்களுக்கு சில அம்சங்கள் முக்கியமானதாக இருக்கும். ஆனால் இந்த தொடரில் அவரை நாம் மிஸ் செய்வோம் என்பதில் சந்தேகமில்லை”

இதையும் படிங்க: கேப்டனாக ரோஹித்.. 2023ஆம் ஆண்டின் சிறந்த கனவு ஒருநாள் அணியை வெளியிட்ட ஐசிசி.. 6 இந்தியர்களுக்கு இடம்

“தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் 2 போட்டிகளில் விளையாடுவதை உலக ரசிகர்களால் பார்க்க முடியாது. விராட் கோலி போன்ற கிளாஸ் மிகுந்த வீரர் விலகுவது எந்த அணிக்கும் பின்னடைவாக இருக்கும். மறுபுறம் இந்த வாய்ப்பு முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெல்வதற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது” என்று கூறினார்.

Advertisement