IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத்தா? இஷான் கிஷானா? – டிராவிட் கூறிய தகவல் இதோ

Dravid
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளை மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்களை குவிக்காதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

IND vs AUS Indore Pitch

- Advertisement -

பின்வரிசையில் அக்சர் பட்டேல், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தால் கூட அணியில் உள்ள முதன்மை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட தவறிவருவது ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோன்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ் பரத்தும் இந்த முதல் மூன்று போட்டியிலும் பெரிய அளவில் ரன்களை குவிக்காதது தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

ஏனெனில் இதுவரை இந்திய அணிக்காக 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 57 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவரது சராசரி வெறும் 14 ரன்கள் தான் என்பதனால் அவரது இடம் தற்போது விவாதத்திற்குரிய விடயமாக மாறி உள்ளது. என்னதான் கே.எஸ் பரத் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டாலும் அவரது விக்கெட் கீப்பிங் அருமையாக உள்ளது. இருப்பினும் கே.எஸ் பரத்தை நீக்கிவிட்டு அதிரடி விக்கெட் கீப்பரான இஷான் கிஷனை சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

KS Bharat 1

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக கே.எஸ் பரத் விளையாடுவாரா? அல்லது இஷான் கிஷன் விளையாடுவாரா? என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது : கே.எஸ் பரத்தின் பேட்டிங் குறித்து நாங்கள் எந்த ஒரு கவலையையும் கொள்ளவில்லை. ஏனெனில் கடினமான சூழல், மைதானத்தில் உள்ள சவால், போட்டியின் சூழ்நிலை என அனைத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கையில் கே.எஸ் பரத் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை என்றாலும் அவர் விளையாடியுள்ள இன்னிங்ஸ்கள் அனைத்தும் சிறப்பான ஒன்றுதான்.

- Advertisement -

அவர் நல்ல இன்டெட்டுடன் பேட்டிங் செய்து வருகிறார். எனவே அவர் குறைந்த அளவில் ரன்களை குவித்து இருந்தாலும் அவருக்கான வாய்ப்பை வழங்குவோம். அதேபோன்று சவாலான மைதானங்களில் விளையாடும் போது அதிர்ஷ்டமும் கொஞ்சம் தேவை. அந்த வகையில் அவருக்கு அதிர்ஷ்டம் மட்டுமே தற்போது தேவைப்படுகிறது. அதைத்தவிர மற்ற எந்த மாற்றமும் அவரிடம் தேவையில்லை.

இதையும் படிங்க : 2.5 நாளில் மேட்ச் முடிவது சரியா? ஸ்பின் விளையாட தெரியாம எப்படி 100 போட்டில விளையாடிருப்பிங்க – கெளதம் கம்பீர் விமர்சனம்

நாங்கள் அவரை எந்தவொரு தொந்தரவும் செய்ய விரும்பவில்லை என்று அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருப்பதால் நிச்சயம் கே.எஸ் பரத்திற்கு நான்காவது போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் தனது அறிமுக வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement