
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தொடங்கியுள்ளது. அந்த தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த வெற்றியால் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியில் திரும்பி வந்த இந்திய அணி வெற்றி பாதையில் நடக்கத் துவங்கியுள்ளது.
முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடவில்லை. குறிப்பாக சமீபத்திய நியூசிலாந்து தொடரில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்த அவர் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தால். அப்படி கடந்த 5 வருடங்களில் விராட் கோலி 3 சதங்கள் மட்டுமே அடித்தது சர்வதேச கிரிக்கெட்டுக்கு உகந்த செயல்பாடு அல்ல என்று ரிக்கி பாண்டிங் கவலை தெரிவித்திருந்தார்.
இருப்பினும் முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்த விராட் கோலி சதத்தை அடித்து 100* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சச்சின் சாதனையையும் அவர் உடைத்திருந்தார். அந்த வகையில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரிலேயே விராட் கோலி சிறப்பாக விளையாடியதை பார்த்ததாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். அந்த நிலையில் தற்போது முதல் போட்டியிலேயே சதத்தை அடித்துள்ள விராட் கோலி இந்தத் தொடரில் பெரிய ரன்கள் குவிப்பார் என்று டிராவிட் கூறியுள்ளார். எனவே இனிமேல் அவரை நினைத்து ஆஸ்திரேலியா தான் கவலைப்பட வேண்டும் என்று அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சில மாதங்களுக்கு முன்பாக விராட் கோலி தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அது போக சில கடினமான பிட்ச்களில் அவர் நன்றாக பேட்டிங் செய்ததாக நான் கருதினேன். அந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் தொடரின் துவக்கத்திலேயே அவர் சதத்தை அடித்துள்ளது விராட் கோலிக்கு நல்ல விஷயம்”
இதையும் படிங்க: 319 ரன்ஸ்.. இங்கிலாந்துக்கு எதிராக நியூஸிலாந்து அசத்தல்.. டிராவிட்டை முந்தி வில்லியம்சன் பரிதாப சாதனை
“அதன் காரணமாக விராட் கோலிக்கு இது பெரிய தொடராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். இதை அடுத்து இந்த தொடரின் இரண்டாவது போட்டி டிசம்பர் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடி வெற்றி பெறுவதற்கு இந்திய அணியினர் தயாராகி வருகிறார்கள்.