நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
சமீபத்தில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்து நியூசிலாந்து வரலாற்று வெற்றியை பெற்றது. அந்த உத்வேகத்துடன் இப்போட்டியில் பேட்டிங்கை துவக்கிய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடினார்.
வில்லியம்சன் ஏமாற்றம்:
அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் டாம் லாதம் 47 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி 34 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரை சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் மிடில் ஆர்டரில் ஜோடி சேர முயற்சித்த டேரில் மிட்சேல் 19, டாம் பிளன்டல் 17 ரன்களில் அவுட்டானார்கள்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய கேன் வில்லியம்சன் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரியுடன் 93 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 13வது முறையாக 90+ ரன்களில் அவுட்டாகியுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிக முறை 90களில் அவுட்டான வீரர் என்ற இந்தியாவின் ராகுல் டிராவிட் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரது சாதனையை உடைத்த வில்லியம்சன் பரிதாப சாதனை படைத்தார்.
நியூஸிலாந்து அசத்தல்:
இதற்கு முன் டிராவிட், ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோர் தலா 12 முறை 90களில் அவுட்டானதே முந்தைய சாதனை. அதே பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 27 முறை 90களில் அவுட்டாகி யாராலும் எளிதில் தொட முடியாத உயரத்தில் முதலிடத்தில் இருக்கிறார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் நாதன் ஸ்மித் 3, மாட் ஹென்றி 18 ரன்களில் அவுட்டானார்கள்.
இதையும் படிங்க: அதுக்குள்ள நம்ப முடியல.. ஆஸியில் ஜெய்ஸ்வால் மாதிரி நிறைய பேர் சாதிக்கல.. இன்னும் வளர்வாரு.. டிராவிட் பாராட்டு
அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 319-8 ரன்கள் குவித்து இந்த போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.
களத்தில் கிளன் பிலிப்ஸ் 41*, டிம் சௌதீ 10* ரன்களுடன் உள்ளனர். இங்கிலாந்துக்கு இதுவரை அதிகபட்சமாக சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.



