
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்ற முடிந்தது. அதில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டியிட்டு வாங்கின. அந்த அணிகளுக்கு மத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 வயதாகும் இளம் இந்திய வீரர் வைபவ் சூரியவன்சியை 1.10 கோடிக்கு வாங்கியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் 58 பந்துகளில் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக அண்டர் 19 டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் அறிமுகமான இந்திய வீரர் என்ற சச்சின் சாதனையும் அவர் உடைத்திருந்தார்.
சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் ராஜஸ்தானுக்கு எதிராக அறிமுகமான அவர் பிகார் அணிக்காக 13 (6) ரன்கள் குவித்து அசத்தினர். அதன் காரணமாக அவரை ராஜஸ்தான் அணி டெல்லியுடன் போட்டியிட்டு வாங்கியது. இந்நிலையில் சூரியவன்சியை வாங்கியது பற்றி ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பேசியது பின்வருமாறு.
“அவரிடம் சில நல்ல திறன்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன். எனவே அவருக்கு இது வளர்வதற்கான நல்ல சூழ்நிலையாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். வைபவ் எங்களுடைய பயிற்சி முகாமுக்கு வந்தார். அங்கே அவருடைய திறமைகளை பார்த்து மகிழ்ச்சியடைந்தோம்” என்று கூறினார். மேலும் 2025 ஐபிஎல் தொடரில் புதிய ராஜஸ்தான் அணியை கட்டமைப்பது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“எங்களுடைய பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்களை தக்க வைத்துக் கொண்டு நாங்கள் இந்த ஏலத்தில் வந்தோம். அதனால் இந்த ஏலத்தில் பவுலர்களை வாங்குவதே எங்களுடைய இலக்காக இருந்தது. எங்களுக்கு வலுவான பவுலிங் அட்டாக் தேவைப்பட்டது. அதை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று நினைக்கிறேன். எங்களிடம் நல்ல பவுலர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க: என் தம்பி மாதிரி நெனச்சேன்.. கடைசில இப்படி நடந்ததில் ரொம்ப கஷ்டமா இருக்கு – டெல்லி அணியின் ஓனர் வருத்தம்
“இந்திய ஸ்பின்னர் கார்த்திகேயாவை நாங்கள் வாங்கியுள்ளோம். அதே போல தனித்துவமான திறன் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் சில இடதுகை வீரர்களை நாங்கள் வாங்கியுள்ளோம். அதே போல பரூக்கி, மபாகா ஆகியோரையும் நாங்கள் பெற்றுள்ளோம். அந்த வகையில் வெறும் ஏலம் என்பதைத் தாண்டி நாங்கள் இந்த மொத்த செயல் முறையையும் விரும்புகிறோம்” என்று கூறினார்.