என் தம்பி மாதிரி நெனச்சேன்.. கடைசில இப்படி நடந்ததில் ரொம்ப கஷ்டமா இருக்கு – டெல்லி அணியின் ஓனர் வருத்தம்

Jindal
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2016-ஆம் ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அந்த அணியுடன் பயணித்து வந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டுடன் அவரது பயணத்தை முடித்துள்ளார். டெல்லி அணியில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாட இருக்கிறார்.

நீங்க போனது உண்மையிலே வருத்தம் தான் :

இதுவரை டெல்லிக்காக 111 போட்டியில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் பதினெட்டு அரைசதம் என 3284 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே கேப்டனாக இருந்து வந்த அவருக்கும் அந்த அணியின் நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட வேற்றுமை காரணமாக டெல்லி அணியில் இருந்து வெளியேறிய அவர் மெகா ஏலத்தில் கலந்து கொண்டார்.

- Advertisement -

அந்த வகையில் மெகா ஏலத்தில் கலந்துகொண்ட அவரை தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லி அணியில் விளையாடியது குறித்து ஒரு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள பண்ட் குறிப்பிடுகையில் : இளம் வீரராக வந்து இன்று நான் பல ஆண்டுகள் டெல்லி அணிக்காக விளையாடியதில் மகிழ்ச்சி. உங்களுடன் இருந்த எனது பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது.

என்னுடைய கடினமான வேளையிலும் என்னை பார்த்து கொண்ட உங்களுக்கு நன்றி.. எனக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.. டெல்லி அணியை ஒரு குடும்பம் போல் நான் உணர்ந்தேன்.. இந்த பயணத்தில் இருந்து குட்பை சொல்வது எளிதல்ல என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் அவரது இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜிந்தால் குறிப்பிடுகையில் :

- Advertisement -

ரிஷப் பண்ட்டை நான் எப்போதும் என்னுடைய இளைய சகோதரன் போன்று தான் பார்க்கிறேன். என்னுடைய அடிமனதிலிருந்து சொல்கிறேன் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்களது முயற்சிக்கு எப்போதும் நான் துணை நிற்பேன். எங்கள் அணியிலிருந்து நீங்கள் விலகுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அதே போன்று எங்களது அணியுடன் உங்களை தக்கவைக்க நான் எவ்வளவோ முயன்றேன்.

இதையும் படிங்க : வருஷா வருஷம் இதே வேலையா போச்சு.. வேறு வழியே இல்லாமல் கடமைக்கு கை தூக்கிய – மும்பை இந்தியன்ஸ்

ஆனாலும் நீங்கள் வெளியேறியதில் வருத்தம் இருந்தாலும் நாங்கள் உங்களை எப்போதுமே நேசிக்கிறோம். நிச்சயம் ஒருநாள் உங்களுடன் மீண்டும் இணைவோம் என டெல்லி அணியின் உரிமையாளர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement