பாண்டியா இடத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக.. பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டது ஏன்? டிராவிட் பதில்

Rahul Dravid
- Advertisement -

உச்சகட்ட விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனல் சுற்றுக்கும் முதலாவதாக தகுதி பெற்றுள்ளது. மேலும் தற்போதைய அணியில் அனைவருமே நல்ல ஃபார்மில் இருப்பதால் நிச்சயமாக இம்முறை 2011 போல இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் முக்கிய நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா காயத்தை சந்தித்து இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனெனில் பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் சமநிலையை ஏற்படுத்தக்கூடிய அவர் மிகச்சிறந்த ஃபினிஷராகவும் 4வது வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கருப்பு குதிரை வீரராக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

ட்ராவிட் பதில்:
இருப்பினும் நிலைமையை சமாளிப்பதற்காக ஏற்கனவே தேர்வாகி கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறிய மற்றொரு ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சம்பந்தமின்றி அவருக்கு பதிலாக பாண்டியா இடத்தில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தேர்வாகியுள்ளது ரசிகர்கள் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தங்களுடைய அணியில் டாப் 7 பேட்ஸ்மேன்கள் வலுவாக இருப்பதாலும் 5 பவுலர்கள் தரமாக இருப்பதாலும் எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் தேவை என்று கருதி பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்துள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெளிவுபடுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாண்டியா காயமடைந்த பின் நாங்கள் 3 வேகம் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் விளையாடி வருகிறோம். மேலும் சுழல் மற்றும் ஆல் ரவுண்டர் பிரிவில் எங்களிடம் பேக் அப் வீரர்கள் இருக்கிறார்கள்”

- Advertisement -

“எனவே இந்த கலவையில் இருக்கும் வீரர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே அதற்கு தகுந்த பேக் அப் தேவை என்பதை கண்டறிந்தோம். எங்களுடைய டாப் 7 பேட்டிங்கில் வரிசையில் தேவையான தரம் இருக்கிறது. அத்துடன் 8, 9, 10, 11 இடங்களில் தற்போது விளையாடும் வீரர்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் தற்போது இருக்கும் வீரர்கள் கடினமாக உழைத்து தங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர்”

இதையும் படிங்க: நடப்பு சாம்பியனை வீட்டுக்கு அனுப்பிய ஆஸி.. இங்கிலாந்தின் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கனவும் பறிபோனதா?

“அதனால் எங்களுக்கு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் தேவை என்று நினைக்கவில்லை. குறிப்பாக 50 ஓவர்கள் முழுவதும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடும் அளவுக்கு டாப் 7 பேட்ஸ்மேன்களில் தேவையான தரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்” என கூறினார். இதை தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement