நடப்பு சாம்பியனை வீட்டுக்கு அனுப்பிய ஆஸி.. இங்கிலாந்தின் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கனவும் பறிபோனதா?

AUS vs ENg
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 4ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 36வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் இங்கிலாந்து கண்டிப்பாக வென்றே தீர வேண்டும் என்ற நிலைமையில் டாஸ் வென்று பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் 11, டேவிட் வார்னர் 15 ரன்களில் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் ஆட்டமிழந்தனர். அதனால் 38/2 என தடுமாறிய அந்த அணிக்கு 3வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்டீவ் ஸ்மித்தை 44 ரன்களில் அவுட்டாக்கிய அடில் ரசித் அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லிஷை 3 ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

இங்கிலாந்து நாக் அவுட் :
அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் அரை சதம் கடந்து அசத்திய மார்னஸ் லபுஸ்ஷேன் 71 ரன்களில் அவுட்டானார். இறுதியில் கேமரூன் கிரீன் 47, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 35, ஆடம் ஜாம்பா அதிரடியாக 29 (19) ரன்கள் எடுத்த உதவியுடன் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 286 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 4, அடில் ரசித் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 287 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் பந்திலேயே ஜானி பேர்ஸ்டோவை கோல்டன் டக் அவுட்டாகிய மிட்சேல் ஸ்டார்க் அடுத்ததாக வந்த ஜோ ரூட்டையும் 13 ரன்களில் செய்தார். அதனால் 19/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற இங்கிலாந்தை மற்றொரு துவக்க வீரர் டேவிட் மாலனுடன் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி காப்பாற்ற போராடினார்.

- Advertisement -

இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் மாலன் 50 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் பட்லர் பொறுப்பின்றி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில ஓவர்களில் பென் ஸ்டோக்ஸ் போராடி 64 ரன்களில் அவுட்டாக காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட லியம் லிவிங்ஸ்டனும் 2 ரன்களில் நடையை கட்டினார்.

போதாக்குறைக்கு மொயின் அலியும் போராடி 42 ரன்களில் அவுட்டானதால் இறுதியில் கிறிஸ் ஓக்ஸ் 32, ரசித் 20 ரன்கள் எடுத்தும் 48.1 ஓவரில் இங்கிலாந்தை 253 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3, ஜோஸ் ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க், கேப்டன் கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 7 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க: நடப்பு சாம்பியனை வீட்டுக்கு அனுப்பிய ஆஸி.. இங்கிலாந்தின் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கனவும் பறிபோனதா?

மறுபுறம் 7 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்து உலகக்கோப்பையிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. குறிப்பாக 300 – 400 ரன்களை அசால்டாக அடிக்கக்கூடிய இங்கிலாந்து 287 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் பரிதாப வெளியேறியது. அதை விட புள்ளி பட்டியலில் டாப் 7 இடங்களுக்குள் நுழைந்து 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற தங்களுடைய கடைசி 2 போட்டிகளில் கண்டிப்பாக வென்றே தீர வேண்டிய கட்டாயத்திற்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது.

Advertisement