401 அடிச்சும் எங்க வெற்றில அது விளையாடிருச்சு.. அவருக்கு இந்த கிரௌண்ட்லாம் பத்தாது.. வில்லியம்சன் ஏமாற்ற பேட்டி

Kane Williamson
Advertisement

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 4ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 35வது லீக் போட்டியில் நியூசிலாந்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் விதிமுறைப்படி பாகிஸ்தான் தோற்கடித்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய பாகிஸ்தானை அதிரடியாக எதிர்கொண்ட நியூசிலாந்து 50 ஓவர்களில் 401/6 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108, கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 402 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு அப்துல்லா சபிக் 4 ரன்களில் சௌதீ வேகத்தில் அவுட்டானாலும் பக்கார் ஜமான் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக மழை வரும் என்பதால் வேகமாக விளையாட வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட அவர் 63 பந்துகளில் சதமடித்து மிரட்டினார்.

- Advertisement -

பரிதாப தோல்வி:
மறுபுறம் கேப்டன் பாபர் அசாம் தம்முடைய பங்கிற்கு 66* ரன்களும் பக்கார் ஜாமான் 126* ரன்களும் எடுத்ததால் 25.3 ஓவரில் பாகிஸ்தான் 200/1 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்து போட்டியை நிறுத்தியது. அப்போது நியூசிலாந்தை விட 21 முன்னிலை பெற்றதன் காரணமாக வென்ற பாகிஸ்தான் தங்களுடைய செமி ஃபைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

அப்படி மழை வந்ததால் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து பின்னடடைவை சந்தித்து செமி ஃபைனல் செல்ல தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 401 ரன்கள் அடித்து முதல் பகுதியில் அசத்திய தங்களுடைய வெற்றியை 2வது பகுதியில் மழை வந்த கெடுத்ததாக கேன் வில்லியம்சன் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

- Advertisement -

மேலும் அதிரடியாக விளையாடிய பஃக்கார் ஜாமனுக்கு பெங்களூரு மைதானம் பெரிதாக இல்லை என்றும் பாராட்டும் அவர் இது பற்றிய பேசியது பின்வருமாறு. “முதல் பகுதி நன்றாக இருந்தது. ஆனால் அதன் பின் வானிலை தன்னுடைய பங்காற்றியது. அதற்காக பாகிஸ்தானின் ஆட்டத்தை மறுக்க முடியாது. ஜமானுக்கு இந்த மைதானம் பெரியதாக இல்லை. பாகிஸ்தான் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டார்கள். ஓவர்கள் குறைக்கப்பட்டது இரு அணிக்கும் வெற்றியை நெருங்கிக் கொண்டு வந்தது”

இதையும் படிங்க: உள்ளே நுழைந்த தெ.ஆ.. மழையை தாண்டி மாஸ் காட்டிய பாகிஸ்தானுக்கு வாய்ப்பிருக்கா? நியூஸிலாந்து வெளியேறியதா?

“ஒருவேளை 50 ஓவர்கள் ஆட்டம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் மைதானத்தின் சிறிய பவுண்டரி அளவை தடுப்பது கடினமாக இருந்தது. இந்த வெற்றிக்கான முழு பாராட்டுக்களும் பாகிஸ்தானை சேரும். எங்களுடைய பவுலர்கள் கடினமான சூழ்நிலையை சந்தித்தனர். ரச்சின் அழகாக விளையாடினார். எதிரணி இடது வலது கை பேட்ஸ்மேன்களுடன் விளையாடும் போது நீங்கள் ஒரு சில விக்கெட்டுகளை எடுத்திருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் அதை நாங்கள் செய்ய முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement