உள்ளே நுழைந்த தெ.ஆ.. மழையை தாண்டி மாஸ் காட்டிய பாகிஸ்தானுக்கு வாய்ப்பிருக்கா? நியூஸிலாந்து வெளியேறியதா?

PAK vs NZ
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 4ஆம் தேதி பெங்களூருவில் காலை 10 மணிக்கு நடைபெற்ற 35வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் செமி ஃபைனலுக்கு செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. அந்த நிலைமையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவோன் கான்வே 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் வந்த கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர்ந்து அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். நேரம் செல்ல செல்ல பாகிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் 2வது விக்கெட்டுக்கு 180 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 108 (94) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவரைப் போலவே மறுபுறம் அசத்திய வில்லியம்சனும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக 10 பவுண்டரி 2 சிக்சருடன் 95 (79) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நல்ல துவக்கத்தை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் டார்ல் மிட்சேல் 29, மார்க் சேப்மேன் 39, கிளன் பிலிப்ஸ் 41, மிட்சேல் சாட்னர் 26* எடுத்ததால் 50 ஓவர்களில் நியூசிலாந்து 401/6 ரன்கள் குவித்து மிரட்டியது.

மறுபுறம் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 402 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் ஆரம்பத்திலேயே சவுதி வேகத்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த கேப்டன் பாபர் அசாம் நிதானமாக விளையாடிய போதிலும் மறுபுறம் நியூசிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட பஃக்கார் ஜமான் விரைவாக அரை சதம் கடந்தார்.

- Advertisement -

அந்த சமயத்தில் மழை வருவது போல் தெரிந்தால் டிஎல்எஸ் விதிமுறைப்படி வெற்றி பெற இன்னும் வேகமாக விளையாட வேண்டிய நிலைமைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. அதை பயிற்சியாளர்கள் பேப்பரில் எழுதி இடைவெளியில் கொடுத்து அனுப்பியதை பார்த்த அவர் மேலும் அதிரடியாக விளையாடி வெறும் 63 பந்துகளில் 100 ரன்கள் கடந்தார். அப்போது மழை வந்த போதிலும் பாகிஸ்தான் 10 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது.

அதைத்தொடர்ந்து மழை நின்ற பின் 41 ஓவரில் 342 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு ஜமான் 8 பவுண்டரி 11 சிக்சருடன் 126* (81) ரன்களும் பாபர் அசாம் 66* ரன்களும் எடுத்து அதிரடி காட்டினார்கள். ஆனால் அப்போது மீண்டும் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் டிஎல்எஸ் விதிமுறைப்படி நியூசிலாந்தை விட 21 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மழை, ரன்ரேட்டை பாத்து பட்டைய கிளப்பிய பஃகார் ஜமான்.. பாகிஸ்தானை காப்பாற்றி 3 மாஸ் வரலாற்று சாதனை

அதனால் நியூஸிலாந்து தோற்றதை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா 2வது அணியாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் மழையைத் தாண்டி வென்ற பாகிஸ்தான் தங்களுடைய கடைசி போட்டியிலும் பெரிய வெற்றியை பெறுவதுடன் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அதனுடடைய கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்தால் செமி ஃபைனல் செல்லலாம் என்ற நிலைமையில் இருக்கிறது. இருப்பினும் இப்போதும் பாகிஸ்தானை விட அதிக ரன்ரேட் கொண்டிருப்பதன் காரணமாக நியூசிலாந்து தங்களுடைய கடைசி போட்டியில் இலங்கையை சாதாரணமாக தோற்கடித்தாலே செமி ஃபைனல் செல்ல வாய்ப்புள்ளது.

Advertisement