மழை, ரன்ரேட்டை பாத்து பட்டைய கிளப்பிய பஃகார் ஜமான்.. பாகிஸ்தானை காப்பாற்றி 3 மாஸ் வரலாற்று சாதனை

Fakhar Zaman 3
Advertisement

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 4ஆம் தேதி பெங்களூருவில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 35வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் வென்றால் தான் செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற சூழ்நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 401/6 ரன்கள் குவித்து உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரநாத் சதமடித்து 108 ரன்களும் கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

சரவெடி சாதனைகள்:
அதைத்தொடர்ந்து 402 என்ற கடினமான இல்லத்தை துரத்திய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அப்துல்லா சபிக் 4 ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிய பஃகார் ஜமான் வேகமாக ரன்களை சேர்த்த நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் பாபர் அசாம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த சமயத்தில் மழை வருவது போல் தெரிந்ததால் டிஎல்எஸ் விதிப்படி நியூசிலாந்தை விட அதிக ரன்ரேட்டை பெறுவதற்கு பாகிஸ்தான் அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது.

அதை பாகிஸ்தான் அணி பயிற்சியாளர்கள் பேப்பரில் எழுதி களத்தில் இருந்த பகார் ஜமானிடம் இடைவெளியில் காட்டினார்கள். அதை பார்த்த பின் மீண்டும் பட்டைய கிளப்பிய அவர் 7 பவுண்டரி 9 சிக்சர்களை பறக்க விட்டு வெறும் 63 பந்துகளில் சதமடித்தார். அப்போது எதிர்பார்த்ததை போலவே மழை வந்ததால் 21.4 ஓவரில் 160/1 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் நியூசிலாந்து விட 10 ரன்கள் கூடுதலாகவே எடுத்தது.

- Advertisement -

அந்தளவுக்கு அட்டகாசமாக விளையாடிய பஃகார் ஜமான் 63 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த பாகிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2007 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்ரான் நசீர் 95 பந்துகளில் சதமடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அது போக 9 சிக்சர்களையும் வெளுத்து வாங்கிய அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.

இதையும் படிங்க: 2.21 மணிக்கு 150 கி.மீ பவுலர் ஹரிஷ் படைத்த அவமான ரெகார்ட்டை.. 2.38க்கு உடைத்த ஷாஹீன் அப்ரிடி

இதற்கு முன் அதே 15 வருடங்களுக்கு முன்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இம்ரான் நசீர் 8 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக மொத்தமாக 16* சிக்சர்கள் அடித்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற மற்றுமொரு சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் 2007 உலகக்கோப்பையில் இம்ரான் நசீர் மொத்தம் 9 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். இதை தொடர்ந்து 41 ஓவரில் 342 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை பாகிஸ்தான் துரத்தி வருகிறது.

Advertisement