பொய் சொல்லிட்டு பார்ட்டிக்கு போனதால் இஷான், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார்களா? ராகுல் டிராவிட் பதில்

Rahul Dravid 2
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஜனவரி 11ஆம் தேதி துவங்குகிறது. 2024 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 14 மாதங்கள் கழித்து மீண்டும் விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இந்த தொடரில் கேஎல் ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். குறிப்பாக கடைசியாக நடைபெற்ற தென்னாபிரிக்க தொடரில் இடம் பிடித்திருந்த இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 2 வீரர்கள் இந்த தொடரில் சம்பந்தமின்றி நீக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாக கடந்த தொடரில் துணை கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்தத் தொடரில் அணியில் கூட இல்லாதது லேசான சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

- Advertisement -

டிராவிட் பதில்:
முன்னதாக நிறைவு பெற்ற தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் தம்முடைய சொந்த காரணங்களுக்காக இஷான் கிசான் விலகினார். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து இந்திய அணியுடன் பயணித்ததால் ஏற்பட்ட பனிச்சுமையை சரி செய்வதற்கு தம்முடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று அவர் கேட்டதால் பிசிசிஐயும் அனுமதி வழங்கியது. ஆனால் அந்த இடைவெளியில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டார்.

அதே போல ஸ்ரேயாஸ் ஐயரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கும்மாளம் போட்டதாக பிசிசிஐ காதுகளுக்கு சென்றது. அதனால் கடுப்பான பிசிசிஐ தங்களிடம் வேறு பொய்யான காரணத்தை சொல்லிவிட்டு நன்னடத்தை மீறி நடந்து கொண்டதால் அவர்களை இந்த ஆப்கானிஸ்தான் தொடரில் நீக்கியதாக நேற்று செய்திகள் வெளியானது. இருப்பினும் இடைவெளியின் போது பார்ட்டிக்கு செல்லக்கூடாது என்று சட்டம் உள்ளதா என அதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் அந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்று தெரிவிக்கும் ராகுல் டிராவிட் இது பற்றி முதல் போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு. “நன்னடத்தை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. இஷான் கிசான் இத்தொடரின் தேர்வுக்கான பட்டியலில் இல்லை. தென்னாப்பிரிக்க தொடரில் இடைவெளி கேட்ட அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம். எனவே தற்போது அவர் விளையாடுவதற்கு தயாராக இல்லை”

இதையும் படிங்க: நினைத்து பார்க்காத ட்விஸ்ட்.. தினேஷ் கார்த்திக்கை வைத்து இந்தியாவை சாய்க்க இங்கிலாந்து போட்ட திட்டம்

“இடைவெளி முடிந்ததும் அவர் உள்ளூர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவார். அதே போல ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அதனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இதன் பின்னணியில் சுமாரான நன்னடத்தை உட்பட எந்த காரணமும் இல்லை” என்று கூறினார்.

Advertisement