நினைத்து பார்க்காத ட்விஸ்ட்.. தினேஷ் கார்த்திக்கை வைத்து இந்தியாவை சாய்க்க இங்கிலாந்து போட்ட திட்டம்

Dinesh Karthik
- Advertisement -

இங்கிலாந்துக்காக எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது.

மேலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் நடைபெற உள்ள இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களை தாண்டி இங்கிலாந்து வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 கிரிக்கெட்டைப் போல டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் இங்கிலாந்து இம்முறை இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

- Advertisement -

டிகே ட்விஸ்ட்:
முன்னதாக இந்த தொடரை முன்னிட்டு இங்கிலாந்து லயன்ஸ் அணி மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதும் 4 பயிற்சி போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவை சாய்ப்பதற்கு தேவையான பயிற்சிகளை எடுக்கும் வகையில் நடைபெறும் அந்த போட்டிகளில் சில முக்கிய இங்கிலாந்து வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்நிலையில் இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெறும் இந்த பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் மைதானங்களைப் பற்றிய சூழ்நிலைகளை இங்கிலாந்து வீரர்கள் தெரிந்து கொள்வதற்காக தினேஷ் கார்த்திக் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் செயல்பாடுகள் இயக்குனர் மோ போபட் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவுக்காக 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடியிருந்த தினேஷ் கார்த்திக் அதன் பின் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்தில் இருக்கும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட்டு போட்டியின் நுணுக்கங்களை தெளிவாக பேசி வியப்பை ஏற்படுத்திய அவர் அந்நாட்டு வாரியத்தை கவர்ந்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது போட்டியில் இருந்து விலகிய விராட் கோலி – என்ன காரணம்?

அதன் காரணமாக தற்போது அவர் தற்காலிகமாக இங்கிலாந்து லயன்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து இயன் பெல், கிரேம் ஸ்வான் போன்ற நட்சத்திர முன்னாள் வீரர்கள் அடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணியின் துணை பயிற்சியாளர்களுடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் செயல்பட உள்ளார். அந்த வகையில் இங்கிலாந்து வாரியத்தின் இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்கள் நினைத்துப் பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement