ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது போட்டியில் இருந்து விலகிய விராட் கோலி – என்ன காரணம்?

Kohli
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடி முடித்த பின்னர் நாடு திரும்பி இருக்கும் வேளையில் அடுத்ததாக இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடர் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற இருக்கும் கடைசி சர்வதேச டி20 தொடர் என்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நாளை ஜனவரி 11-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்கள் அவர்களின் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விளையாடிய அவர்கள் இருவரும் அதன் பின்னர் எந்தவொரு டி20 போட்டியலும் விளையாடாமல் தற்போது தான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் நாளை ஜனவரி 11-ம் தேதி மொஹாலியில் நடைபெற இருக்கும் முதலாவது டி20 போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் : விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக முதலாவது டி20 போட்டியில் விளையாட மாட்டார் என்றும் எஞ்சிய இரண்டு போட்டிகளில் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஓரளவு ஃபிட்டாகி ஒத்த காலில் வந்தாலும்.. அவரை 2024 டி20 உ.கோ டீம்ல எடுங்க.. கவாஸ்கர் கோரிக்கை

இதன் காரணமாக நாளைய போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக வேறொரு வீரருக்கு அந்த இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் திரும்பி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement