ரூல்ஸை ஃபாலோ பண்றதில்ல தப்பில்ல.. இந்தியா டைம் அவுட்டை செய்யுமா என்ற கேள்விக்கு.. டிராவிட் வித்யாசமான பதில்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 145 வருட சர்வதேச கிரிக்கெட்டில் காலதாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாபமான சாதனை படைத்தது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அதாவது தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர் கடைசி நேரத்தில் தம்முடைய ஹெல்மெட் பழுதாகயிருந்ததை பார்த்ததால் அதை மாற்றுவதற்கு முயற்சித்தார்.

ஆனால் அப்போது வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாக புகார் செய்த ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியினர் தங்களுக்கு அவுட் கொடுக்குமாறு நடுவர்களிடம் கேட்டுக் கொண்டனர். அதை சோதித்த நடுவர்கள் முந்தைய பேட்ஸ்மேன் வெளியேறிய பின் அடுத்த 2 நிமிடத்திற்குள் வந்து பந்தை எதிர்கொள்ள தவறியதால் மேத்யூஸ் அவுட் என்று அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது.

- Advertisement -

டிராவிட் கருத்து:
மேலும் ஷாகிப் மற்றும் வங்கதேசம் மேல் வைத்திருந்த மரியாதை போய்விட்டதாக விமர்சித்த மேத்யூஸ் தாம் 2 நிமிடத்திற்குள் பேட்டிங் செய்ய வந்த வீடியோவை ஐசிசியிடம் சமர்ப்பித்து நடுவர்கள் தவறான தீர்ப்பு வழங்கியதாக நியாயம் கேட்டார். இந்நிலையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்த சாகிப் மற்றும் வங்கதேசம் மீது எந்த தவறுமில்லை என்று இந்திய ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

அதற்காக வருங்காலங்களில் இந்திய அணி இது போன்ற வேலையை செய்யாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு. “இந்த விவாதங்களில் ஒவ்வொருவரும் வித்தியாசமாக சிந்திப்பார்கள். நாம் அனைவரும் தனித்துவமான உயிரினங்கள் என்பதால் நம்முடைய சொந்த மனங்களும் எண்ணங்களும் இருக்கின்றன. அதே போல ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு சூழ்நிலையில் வித்தியாசமாக சிந்திப்பார்கள்”

- Advertisement -

“அதில் உண்மையான சரி அல்லது தவறு போன்ற முடிவுகள் கிடையாது. நீங்கள் விதிமுறைகளை பின்பற்றலாம் அல்லது கிரிக்கெட்டை நேர்மைத்தன்மையுடன் விளையாடலாம். அந்த இரண்டுக்குமே ஆதரவாக இரு தரப்பினர் இருப்பார்கள். சிலர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிலர் விதிமுறைக்குட்பட்டு இருப்பதால் தாராளமாக செய்யலாம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரை விதிமுறையை நுணுக்கமாக பின்பற்றிய ஒருவர் மீது புகார் செய்ய முடியாது”

இதையும் படிங்க: கஷ்டமான வேலைய செஞ்சு அவர் தான் எங்களோட வெற்றிகளை ஈஸியாக்குறாரு.. ராகுல் டிராவிட் பாராட்டு

“ஏனெனில் உண்மையாக அவர் விதிமுறையை பின்பற்றியுள்ளார். அதே சமயம் நாங்கள் அதை செய்யாமல் இருக்கலாம். அதற்காக விதிமுறையை பின்பற்றி அதை செய்த ஒருவரை நீங்கள் தவறு என்று சொல்ல முடியாது. நீங்கள் அதை செய்கிறீர்களா இல்லையா என்பது உங்களுடைய தைரியமான முடிவைப் பொறுத்தது” என்று கூறினார். முன்னதாக அனைவரும் மன்கட் அவுட்டை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் கூட மேத்யூஸ் அவுட் செய்யப்பட்ட விதத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement