கஷ்டமான வேலைய செஞ்சு அவர் தான் எங்களோட வெற்றிகளை ஈஸியாக்குறாரு.. ராகுல் டிராவிட் பாராட்டு

- Advertisement -

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதனால் செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் அரையிறுயில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து ஃபைனல் செல்வதற்கு மும்முரமாக தயாராகி வருகிறது.

இந்த வெற்றிகளில் அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பாக விளையாடி தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி முக்கிய பங்காற்றி வருகிறார்கள். அதில் பேட்டிங் துறையில் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகிய அனைவருமே பெரிய ரன்களை குவித்து அசத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களை விட கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்து வருகிறார்.

- Advertisement -

டிராவிட் பாராட்டு:
குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தும் அவர் தம்முடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் ஆரம்பத்திலேயே அதிரடியான சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்க விட்டு பெரிய ஸ்கோர் குவிப்பதற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறார். இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே வேகமாக ரன்களை குவித்து அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையையும் இந்தியாவின் வெற்றியையும் எளிதாக்குவதாக பயிற்சியாளர் ராகுல் டிராபிக் பாராட்டுகின்றனர்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக செயல்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. அவர் களத்திலும் களத்திற்கு வெளியேயும் கேப்டனாக அணியையும் முன்னின்று வழி நடத்துகிறார். குறிப்பாக ஆரம்பத்திலேயே பட்டாசு போல விளையாடி அவர் எங்களுக்கு அதிரடியான துவக்கத்தை கொடுக்கிறார்”

- Advertisement -

“முக்கிய போட்டியில் அவர் கொடுக்கும் துவக்கம் தான் எங்களுக்கு வெற்றிக்கான பாதையை திறக்கிறது. இறுதியில் அதைப் பார்ப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கலாம். ஆனால் பயிற்சியாளர்களாக அவர் ஏற்படுத்தும் தாக்கத்தின் கடினத்தன்மையை நாங்கள் அறிவோம். குறிப்பாக அவர் பேட்டிங் துறையில் அடுத்து வரும் வீரர்களின் வேலையை எளிதாக மாற்றுகிறார். எனவே எஞ்சிய போட்டிகளிலும் அவர் இதே போல இந்தியாவை தலைமை தாங்குவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்”

இதையும் படிங்க: நெதர்லாந்து போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில் ஓய்வு யாருக்கு? மாற்றம் நிகழுமா.. டிராவிட் பதில்

“பொதுவாக நாங்கள் அதிரடியாக விளையாடுவதை பற்றி பேசுவோம். அது போன்ற அணுகு முறையில் உங்களுடைய கேப்டன் அதிரடியாக விளையாடி எடுத்துக்காட்டாக இல்லாமல் போனால் மற்றவர்களால் அதை பின்பற்ற முடியாது. அவருடைய கேப்டன்ஷிப் செயல்பாடுகளும் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதனால் அவர் எங்களுடைய அணியில் அதிகமான மதிப்பை பெற்றுள்ளார். இந்த வெற்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும் தகுதியான அவர் இதை தொடர்வார் என்று நம்புகிறேன்” என்று கூறினார். இதை தொடர்ந்து இந்தியா தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement