WTC Final : ஃபைனலில் அசத்தி கப் ஜெயிச்சு கொடுங்க, உங்களுக்கு தொடர்ந்து சான்ஸ் தரோம் – சீனியர் வீரருக்கு டிராவிட் வாக்குறுதி

Rahul-Dravid
- Advertisement -

இங்கிலாந்தின் புகழ்பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஐசிசி தர வரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி என ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் கோப்பையை வெல்வதற்கு கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

rahane

- Advertisement -

குறிப்பாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக திகழும் இந்தியா கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு இம்முறை ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. மேலும் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய மிகப்பெரிய தன்னம்பிக்கையுடனும் இப்போட்டியில் இந்தியா விளையாட உள்ளது.

டிராவிட் வாக்குறுதி:
முன்னதாக கடந்த 10 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளில் பங்காற்றி வரும் அஜிங்கிய ரகானே 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான பின் நாடு திரும்பிய விராட் கோலியின் இடத்தில் கேப்டனாக பொறுப்பேற்று சதமடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அத்துடன் அடுத்தடுத்த போட்டிகளில் சீனியர் வீரர்கள் காயத்தால் வெளியேறிய போது இளம் வீரர்களை அபாரமாக வழிநடத்திய அவர் காபா கோட்டையை தகர்த்து 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது.

Ajinkya Rahane WTC Final

ஆனால் அத்தொடருக்குப் பின் சதமடிக்காமல் தடுமாறியதால் கடந்த பிப்ரவரியில் கழற்றி விடப்பட்ட அவரின் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டது. இருப்பினும் மனம் தளராமல் கடந்த ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து ஐபிஎல் 2023 தொடரில் சென்னை அணியில் யாருமே எதிர்பாராத வகையில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் அட்டகாசமாக பேட்டிங் செய்து 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இப்போட்டியில் 15 மாதங்கள் கழித்து நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஃபைனலில் இந்தியா கோப்பையை வெல்லும் அளவுக்கு ரகானே சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களை தாண்டி தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் மீண்டும் அவர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நல்ல உணர்வை கொடுக்கிறது. ஒரு சில வீரர்கள் காயத்தை சந்தித்ததால் அவருக்கு கம்பேக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது”

“அவரை போன்ற தரமானவர் மீண்டும் அணியில் இருப்பது எங்களுடைய சிறப்பாகும். குறிப்பாக இங்கிலாந்து உட்பட கடந்த காலங்களில் வெளிநாடுகளில் சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள அவர் அணியில் நிறைய அனுபவத்தை கொண்டு வருகிறார். அதே போல ஸ்லிப் பகுதியில் அவர் சிறப்பாக கேட்ச் பிடிக்கும் திறமை கொண்டவர். அதை விட அணியில் நன்னடத்தையை கொண்டு வருபவராக அவர் இருப்பது மிகவும் முக்கியமாகும். மேலும் இதற்கு முன் இந்தியாவை வெற்றிகரமாக வழி நடத்தியுள்ள அவர் மீண்டும் அணியில் இருப்பது சிறப்பாகும்”

இதையும் படிங்க:WTC Final : பயிற்சிக்கு கொடுக்கப்பட்ட பிட்சே இவ்ளோ மோசமா இருக்கு. அஷ்வின் பாய்ச்சல் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

“இந்த சமயத்தில் அவரை ஒரு போட்டிக்காக மட்டும் நீங்கள் அழைக்க முடியாது. சில நேரங்களில் அணியிலிருந்து கழற்றி விடப்படும் நீங்கள் கம்பேக் கொடுத்தால் சிறப்பாக செயல்படும் வரை மீண்டும் தொடர்ந்து விளையாடலாம். அதாவது நீங்கள் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவீர்கள் என்று எந்த கல்வெட்டிலும் எழுதப்படவில்லை. எனவே அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் காயமடைந்த வீரர்கள் குணமடைந்து வந்தாலும் என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்” எனக் கூறினார்.

Advertisement