WTC Final : பயிற்சிக்கு கொடுக்கப்பட்ட பிட்சே இவ்ளோ மோசமா இருக்கு. அஷ்வின் பாய்ச்சல் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

Ashwin
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்று விளையாட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப் போட்டியானது ஜூன் 7-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

IND vs AUS Indore Pitch

- Advertisement -

இந்நிலையில் இந்த மாபெரும் இறுதி போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் முன்கூட்டியே இங்கிலாந்து வந்து தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் தற்போது சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் எப்போதும் இங்கிலாந்தில் இருக்கும் ஆடுகளங்கள் ஆசிய மைதானத்தில் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தயார் படுத்தப்படும் என்கிற வேளையில் தற்போது முழுக்க முழுக்க ஆஸ்திரேலியா அணிக்கு ஏற்றவாறு தயார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Dravid

இதுகுறித்து பேசியுள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறுகையில் : பொதுவாக இந்திய அணியின் வீரர்கள் பயிற்சி செய்ய நல்ல ஆடுகளத்தை தான் இங்கு வழங்குவார்கள். ஆனால் இம்முறை எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சிய ஆடுகளம் கொஞ்சம் அபாயகரமாக உள்ளது. பந்துகள் தாறுமாறாக பவுன்ஸ் ஆகி வருகின்றன. இதன் காரணமாக எங்களது அணியின் பேட்ஸ்மேன்களும் அடிபட்டு வருகின்றனர் என அஸ்வின் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : WTC Final : இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியா இந்த விடயத்தில் பலமாக இருக்கிறது – ரவி சாஸ்திரி கருத்து

அதோடு இறுதிப் போட்டிக்கு வழங்கப்பட்டுள்ள ஆடுகளம் அதிகளவு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்காதா சூழலில் கூட இருக்கலாம் என அஸ்வின் கணித்துள்ளார். இதன் காரணமாக மோசமான ஆடுகளத்தை வழங்கிய ஐசிசி மீது பிசிசிஐ முறைப்படி புகார் அளிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement