WTC Final : இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியா இந்த விடயத்தில் பலமாக இருக்கிறது – ரவி சாஸ்திரி கருத்து

Ravi-Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 2023-ஆவது ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைக் தொட்டுள்ளது.

IND vs AUS

- Advertisement -

அதேவேளையில் கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி தொடர்களில் இதுவரை எந்த ஒரு கோப்பையையும் கைப்பற்றாத இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று அந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருடன் பும்ரா இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி ஆஸ்திரேலிய அணிக்கு சமமாக இருந்திருக்கும் என்றும் தற்போது பும்ரா இல்லாததால் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி வேகப்பந்து வீச்சில் பலமிழந்து காணப்படுவதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Bumrah 1

இது குறித்து அவர் கூறுகையில் : இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களையும் பார்த்தால் அதில் சிறந்த வீரர்களை யார்? கொண்டு இருக்கிறார்கள் என்பது நமக்கு தெளிவாக தெரியும். ஒருவேளை இந்திய அணி பும்ராவை விளையாட வைத்திருந்தால் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோரது கூட்டணி ஆஸ்திரேலிய அணிக்கு சமமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கலாம்.

- Advertisement -

ஆனால் தற்போது பும்ரா இந்திய அணியில் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை பேட் கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இருக்கிறார்கள், அதோடு ஹேசல்வுட் காயத்தினால் வெளியேறி இருந்தாலும் அவருக்கு பதிலாக மைக்கல் நேசர் அணியில் இடம் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : WTC Final : தாக்கூரை நம்பாதீங்க, இந்தியாவின் பலமான அந்த 2 பேரும் விளையாடினா ஆஸி திணறுவாங்க – மாண்டி பனேசர் பேட்டி

அதேபோன்று ஸ்காட் போலன்டும் தற்போது நல்ல திறன்களுடன் செயல்பட்டு வருகிறார். எனவே தற்போதைய இந்திய அணியை காட்டிலும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி பலமாக இருப்பதை பார்க்க முடிகிறது என ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement