WTC Final : தாக்கூரை நம்பாதீங்க, இந்தியாவின் பலமான அந்த 2 பேரும் விளையாடினா ஆஸி திணறுவாங்க – மாண்டி பனேசர் பேட்டி

Panesar
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுள்ள இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க போரட உள்ளது. குறிப்பாக 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வென்ற தன்னம்பிக்கையுடன் இந்தியா களமிறங்குகிறது.

Ashwin

- Advertisement -

மறுபுறம் வரலாற்றில் 5 உலக கோப்பைகளையும் டி20 உலக கோப்பையும் வென்று ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அசத்தி வரும் ஆஸ்திரேலியா இப்போட்டியில் முதல் முயற்சிலேயே இந்த கோப்பையை வென்று சமீப காலங்களில் இந்தியாவிடம் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க உள்ளது. இருப்பினும் இப்போட்டி இரு அணிகளுக்கும் சாதகமில்லாமல் பொதுவான இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ளது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஸ்விங் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் இங்கிலாந்து மைதானங்களில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதே வெற்றிக்கான தாரக மந்திரமாக பார்க்கப்படுகிறது.

பனேசர் கருத்து:
மேலும் கடந்த ஃபைனலில் 3 வேகம் அஸ்வின் – ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தது. அதனால் இம்முறை போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் கடந்த முறை இங்கிலாந்தை தோற்கடிக்க உதவிய ஷார்துல் தாக்கூர் விளையாட வேண்டுமென்றும் அஸ்வினை விட பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஜடேஜா மட்டும் களமிறங்க வேண்டும் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை விட ஓவல் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியா தங்களுடைய பலமான சுழல் பந்து வீச்சை நம்பி அஸ்வின் – ஜடேஜா ஆகிய இருவருக்குமே வாய்ப்பு கொடுக்க வேண்டுமென முன்னாள் இங்கிலாந்து வீரர் மாட்டி பனேசர் கூறியுள்ளார்.

Thakur

அத்துடன் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கக்கூடிய ஷார்துல் தாக்கூரை நம்பாமல் இங்கிலாந்து மண்ணில் இதற்கு முன் சிறப்பாக செயல்பட்டு நல்ல சாதனையை வைத்துள்ள உமேஷ் யாதவ் விளையாட வேண்டும் என தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்தில் இந்த ஒரு மைதானம் மட்டுமே உங்களுக்கு 2 ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவதற்கான ஆதரவை கொடுக்கும். ஒருவேளை பந்து சுழன்றால் நிச்சயமாக பவுன்ஸ் இருக்கும். என்னுடைய பார்வையில் இம்முறை ஓவல் பிட்ச் ஃபிளாட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“அது போன்ற சூழ்நிலையில் இம்மைதானம் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் விளையாடுவதற்கு நிச்சயமாக பொருந்தும். மேலும் சமீப காலங்களில் குறிப்பாக இந்தியாவில் தரமான சுழலுக்கு எதிராக ஆஸ்திரேலியா தடுமாறியதை நாம் பார்த்தோம். இப்போதைக்கு இங்கிலாந்தில் வெப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அதனால் லண்டனில் நடைபெற்ற டி20 ப்ளாஸ்ட் போட்டிகளில் கூட பந்து ஸ்விங்கானது. அதே சமயம் இப்போட்டி நடைபெறும் ஓவல் பிட்ச்சில் அதிகமாக புற்கள் இருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் இந்த ஃபைனல் குறைந்தது 4 நாட்கள் நடைபெற வேண்டுமென விரும்புவார்கள்”

Panesar

“அதே போல வேகப்பந்து வீச்சில் யார் விளையாட போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளேன். நிறைய தேர்வுகள் இருந்தாலும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் எக்ஸ்ட்ரா பேட்டிங் வாய்ப்புகளை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். எனவே 3வது வேகப்பந்து வீச்சாளராக நான் உமேஷ் யாதவை தேர்வு செய்வேன்”

இதையும் படிங்க:WTC Final : இங்கிலாந்து சூழ்நிலையில் விக்கெட் கீப்பிங் பற்றி தோனி அந்த அட்வைஸ் கொடுத்தாரு – கேஎஸ் பரத் பேட்டி

“குறிப்பாக 140 கி.மீ வேகத்தில் 5வது ஓவர்களை தொடர்ந்து வீசி ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுங்கள் என்று ரோகித் சர்மா சொன்னாலும் அதை செய்யும் தகுதி அவரிடம் இருக்கிறது. அவரைப் போன்ற எக்ஸ்ட்ரா வேகத்தில் வீசும் பவுலர் உங்களுக்கு தேவை” என்று கூறினார்.

Advertisement