அதுக்காக என்னோட அம்மா திட்டுனாங்க, வாழ்க்கைல அதை நான் பண்ணிருக்க கூடாது – ராகுல் டிராவிட் வருத்தம்

Dravid
- Advertisement -

நட்சத்திர முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் வரலாற்றின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 1996இல் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பத்திலிருந்தே சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிரந்தர இடத்தைப் பிடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று எதிரணி பவுலர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு அதிக பந்துகளை எதிர்கொண்டு பெரிய ரன்களை குவித்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் மொத்தமாக 164 போட்டிகளில் 36 சதங்கள் உட்பட 13288 ரன்களை எடுத்த ஜாம்பவானாக போற்றப்படுகிறார்.

அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் 344 போட்டிகளில் 10889 ரன்களை விளாசி சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக இந்தியாவின் மேட்ச் வின்னராக செயல்பட்டு ஓய்வு பெற்றார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் தடுப்புச் சுவர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் ஓய்வுக்கு பின் 2016 முதல் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இயக்குனராகவும் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை வெல்வதற்கு உதவினார்.

- Advertisement -

அம்மா திட்டுனாங்க:
அதன் காரணமாக தற்போது சீனியர் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வரும் அவர் சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும் எப்போதும் ரசிகர்களால் மதிக்கப்படுகிறார். அந்த வகையில் பொதுவாகவே அமைதியானவராக பொறுமையின் சிகரமாக கருதப்படும் டிராவிட்டை கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு தனியார் நிறுவனம் பெரிய தொகையை கொடுத்து கோபமானவராக நடிக்கச் சொல்லிய விளம்பரம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

குறிப்பாக ட்ராபிக் சிக்னலில் சிக்கிக் கொள்ளும் டிராவிட் வங்கிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் மிகவும் கோபமடைந்து பேட்டால் கார் கண்ணாடிகளை உடைத்து “நான் இந்திரா நகரின் ரவுடி” என்ற பிரபல இந்தி வசனத்தை பேசிய அந்த விளம்பரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வைரலானது. இந்நிலையில் அந்த விளம்பரத்தை தாம் நேர்மறையாக பார்த்தாலும் தம்முடைய அம்மா ஏன் அப்படி நடித்தாய் என்று திட்டியதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். அதனால் அந்த விளம்பரத்தில் ஏன் நடித்தோம் என்று தற்போது நினைப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த ஆள் எப்போது கோபமடைந்து வெடிக்கப் போகிறார் என்று நினைத்து இப்போதெல்லாம் என்னை அனைவரும் மிகவும் வித்தியாசமாக பார்க்கிறார்கள். இது ஒரு நல்ல நேர்மறையான பதில். இருப்பினும் அதற்கான எதிர்வினைகள் பற்றி எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் அது நல்ல வரவேற்பை பெற்றது என்று நினைக்கிறேன். இருப்பினும் என்னுடைய அம்மாவிடம் அந்த விளம்பரத்திற்காக நல்ல பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன. ஆனால் அவர் அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக திருப்தியடையவில்லை”

“குறிப்பாக அந்த விளம்பரத்தில் பேட்டால் நான் கார் கண்ணாடிகளை உடைத்திருக்கக் கூடாது என்று அவர் கருதுகிறார். மேலும் இப்படித்தான் நீ நடந்து கொள்வாயா என்று அவர் என்னிடம் கேட்டார். எனவே மும்பையில் உள்ள ஒரு தெருவில் வெளிப்படையாக நின்று அப்படி நடித்தது எனது வாழ்வில் நான் செய்த சங்கடமான காரியங்களில் ஒன்று. அது ஒரு விளம்பர படமாக இருந்தாலும் உங்களை சுற்றி பகுதி நேர நடிகர்கள் அல்லது மக்கள் இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியிருந்தும் என்னை போன்ற ஒருவருக்கு அந்த சாலையின் நடுவில் நின்று கத்தி கூச்சலிட்டு நடித்தது மிகவும் சங்கடமாக இருந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க:உம்ரான் மாலிக்கை நமக்கு யூஸ் பண்ண தெரில, அதை செஞ்சா மார்க் வுட் மாதிரி மிரட்டுவாரு – இந்தியாவுக்கு மஞ்ரேக்கர் முக்கிய அட்வைஸ்

முன்னதாக மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்ட ராகுல் டிராவிட் பயிற்சியாளராக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு வெற்றியை பதிவு செய்ய தவறிய நிலையில் 2023 உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தோல்வியை சந்தித்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement