உம்ரான் மாலிக்கை நமக்கு யூஸ் பண்ண தெரில, அதை செஞ்சா மார்க் வுட் மாதிரி மிரட்டுவாரு – இந்தியாவுக்கு மஞ்ரேக்கர் முக்கிய அட்வைஸ்

- Advertisement -

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக கடைசி கட்ட போட்டிகளில் காயமடைந்த தமிழகத்தின் நடராஜனுக்கு பதிலாக வாய்ப்பு பெற்று 145 கி.மீ வேகத்தில் தொடர்ந்து பந்து வீசி அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலியின் பாராட்டுக்களை பெற்றார். அதனால் 2022 சீசனில் தக்க வைக்கப்பட்டு முழுமையான வாய்ப்பு பெற்ற அவர் 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் 150 கி.மீ வேகத்தில் தொடர்ந்து பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை பறக்க விட்ட அவர் இந்தியாவுக்காக விளையாட வேண்டுமென்று ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

- Advertisement -

அந்த நிலையில் 2022 அயர்லாந்து டி20 தொடரில் அறிமுகமான அவர் வேகமாக பந்து வீசினாலும் நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தைப் பின்பற்றாமல் ரன்களை வாரி வழங்கியதால் 2 போட்டியுடன் கழற்றி விடப்பட்டார். அதனால் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக்கோப்பையில் அவரை இந்தியா தவற விட்டதாக வாசிம் அக்ரம், பிரட் லீ போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி சில விவேகத்தை கற்றுக் கொண்டு மீண்டும் கம்பேக் கொடுத்த உம்ரான் மாலிக் கடந்த பிப்ரவரியில் நடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் குறைந்த ரன்களை மட்டுமே கொடுத்து நல்ல விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

யூஸ் பண்ண தெரில:
குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற பும்ராவின் சாதனைகளை தகர்த்த அவர் நிலையான இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் 2023 தொடரில் ஹைதராபாத் அணியில் மீண்டும் ரன்களை வாரி வழங்கியதால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். அதனால் வேகத்தை மட்டுமே வைத்துக் கொண்டு எதுவும் சாதிக்க முடியாது என்று அவர் மீது நிறைய விமர்சனங்களும் காணப்படுகின்றன.

இந்நிலையில் கற்றுக் கொடுத்தாலும் வராத இயற்கையான வேகத்தை கொண்டுள்ள உம்ரான் மாலிக்கை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு பதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தினால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். குறிப்பாக நடைபெற்று முடிந்த 3வது ஆஷஸ் போட்டியில் 150 கி.மீ வேகத்திற்கு மேல் தொடர்ந்து பந்து வீசி 7 விக்கெட்களை சாய்த்த மார்க் வுட் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்தை வெற்றி பாதைக்கு திருப்பி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

அந்த வகையில் அதிக வேகம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அடி வாங்கினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். எனவே உம்ரான் மாலிக் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்று விளையாடினால் வெற்றிகரமாக செயல்படுவார் என்று தெரிவிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் இது பற்றி சமீபத்திய பேட்டில் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நீங்கள் உம்ரான் மாலிக்கை தேர்வு செய்ய விரும்பினால் அது டெஸ்ட் கிரிக்கெட்டாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் கடந்த ஆஷஸ் போட்டியில் நாம் மார்க் வுட் எப்படி விளையாடினார் என்பதை பார்த்தோம்”

Sanjay

“குறிப்பாக 90 மைல்ஸ் வேகத்தில் வீசும் பவுலருக்கு எதிராக டெயில் எண்டர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாட முடியாது. எனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளில் முக்கியமற்ற தொடர்களில் அவருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்து 3 – 4 ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை வீச வைத்து சோதிக்கலாம். அந்த வகையில் அவர் நம்முடைய பந்து வீச்சுத் துறையில் துருப்பு சீட்டுக்காக செயல்பட வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க:IND vs WI : இவரையா சேக்காம விட்டீங்க? ஆரம்பிச்ச அரைமணி நேரத்துலயே 90 வருட சரித்திர சாதனை படைத்து அசத்திய – அஷ்வின்

“மேலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதிகப்படியான அழுத்தத்தை கொண்டுள்ள நீங்கள் கொஞ்சம் தவறி பந்து வீசினாலும் அதிக ரன்கள் கொடுப்பதற்கு வாய்ப்புள்ளது. அதனால் அவரைப் போன்ற பவுலரை கேப்டன் எப்போதுமே விரும்ப மாட்டார்கள். இப்படி தான் பாகிஸ்தான் ஆரம்ப காலங்களில் தங்களுடைய அணியை உருவாக்கினர். அதாவது 90 மைல்ஸ் வேகத்தில் வீசுபவர்களை நேரடியாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு பதிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் வாய்ப்பளித்து வளர்த்தனர்” என்று கூறினார்.

Advertisement