IND vs WI : இவரையா சேக்காம விட்டீங்க? ஆரம்பிச்ச அரைமணி நேரத்துலயே 90 வருட சரித்திர சாதனை படைத்து அசத்திய – அஷ்வின்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்தியா சார்பில் யசஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிசான் ஆகியோர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தக்நரேன் சந்தர்பால் மற்றும் கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் ஆகியோர் நிதானமாக செயல்பட்டு நங்கூரத்தை போட்டு 31 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அப்போது பந்து வீச்சை துவங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிரண்டு ஓவர்களில் வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்து அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில் தன்னுடைய 3வது ஓவரில் தக்நரேன் சந்தர்பாலை சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி கிளீன் போல்ட்டாக்கினார். குறிப்பாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சிவ்நரேன் சந்தர்பால் மகனான அவர் கிட்டத்தட்ட தன்னுடைய தந்தையைப் போலவே வித்தியாசமான பேட்டிங் ஸ்டேன்ஸை கடைப்பிடித்து முழுமையாக தடுத்த போதிலும் ஆஃப் ஸ்டம்ப்பை அஸ்வின் எப்படி காலி செய்தார் என்ற ஆச்சரியத்தில் ஏமாற்றத்துடன் 12 ரன்களில் பெவிலியனை நோக்கி நடந்தார்.

- Advertisement -

தனித்துவமான சாதனை:
மறுபுறம் ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய பவுலராக உலக சாதனை படைத்து 450க்கும் மேற்பட்ட விக்கெட்களை சாய்த்து மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ள அஸ்வின் இளம் வீரராக அவரை அவுட்டாக்கியதில் ஆச்சரியமில்லை என்றே சொல்லலாம். ஆனால் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அப்படிப்பட்ட தரமான அஸ்வின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாதது கடைசியில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

இருப்பினும் என்னையா ஃபைனலில் சேர்க்காமல் விட்டீங்க என்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிர்வாகத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டி துவங்கிய அரை மணி நேரத்திலேயே தக்நரேன் சந்தர்பாலை அவுட்டாக்கிய அஸ்வின் ஏற்கனவே 2011ஆம் ஆண்டு இதே போல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணியில் முதல் முறையாக அறிமுகமானார். அந்த முதல் தொடரிலேயே வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சிவ்நரேன் சந்தர்பாலை அவுட்டாக்கிய அஸ்வின் தற்போது 12 வருடங்கள் கழித்து அவருடைய மகனையும் அவுட்டாக்கியுள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தந்தை மற்றும் மகனை அவுட்டாக்கிய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற தனித்துவமான சரித்திர சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். குறிப்பாக 90 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் போன்ற யாருமே இப்படி எதிரணியில் விளையாடிய ஒரு தந்தை மகன் விக்கெட்டுகளை எடுத்ததில்லை. மேலும் உலக அளவில் தந்தை மகன் ஜோடியை அவுட்டாக்கி 5வது பவுலர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:

1. இயன் போத்தம் (இங்கிலாந்து) : லான்ஸ் – கிறிஸ் கேரின்ஸ்
2. வாசிம் அக்கரம் (பாகிஸ்தான்) : லான்ஸ் – கிறிஸ் கேரின்ஸ்
3. மிட்சேல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) : சிவ்நரேன் சந்தர்பால் – தக்நரேன் சந்தர்பால்
4. சைமன் ஹர்மார் (தென்னாப்பிரிக்கா) : சிவ்நரேன் சந்தர்பால் – தக்நரேன் சந்தர்பால்
5. ரவிச்சந்திரன் அஸ்வின் : சிவ்நரேன் சந்தர்பால் – தக்நரேன் சந்தர்பால்

இதையும் படிங்க:TNPL 2023 : ஃபைனலில் நெல்லையை சல்லி சல்லியாக நொறுக்கிய கோவை – அசத்தல் சாதனையுடன் கோப்பையை தக்க வைத்தது எப்படி?

அத்துடன் நிற்காத அஸ்வின் கேப்டன் ப்ரத்வெய்ட்டை 20, அதனாசி 47, அல்சாரி ஜோசப்பை 4 ரன்களில் அவுட்டாக்கினார். போதாகுறைக்கு அடுத்து வந்த ரெய்பர் 2, ப்ளாக்வுட் 14, ஜோஷ்வா டா சில்வா 2 ரன்களில் அவுட்டானதால் 135/8 என ஆரம்பத்திலே சுமாரான தொடக்கத்தை பெற்று இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தடுமாறி வருகிறது.

Advertisement