அவருக்கு கொஞ்சம் கூட ஈகோவே இல்லை.. வெய்ட் பண்ணி என்கிட்ட பேசுனாரு.. சோயப் மாலிக் வியப்பு

Shoaib Malik
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிகளில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் இருந்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதனால் 2011 போல இம்முறை நிச்சயமாக நம்மால் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையும் இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெற்றிகளில் பங்காற்றி வரும் ரோகித், விராட், ஷமி போன்ற வீரர்களை கொண்டாடி வரும் இந்திய ரசிகர்கள் அதன் பின்னணியில் இருக்கும் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை பெரிய அளவில் பாராட்டுவதில்லை என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஈகோ இல்லாதவர்:
ஒரு வீரராக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து பெருஞ்சுவர் என ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற அவர் 2016 முதல் அண்டர்-19 அணியின் பயிற்சியாளராக இருந்து 2018இல் பிரிதிவி ஷா தலைமையில் உலகக் கோப்பையை வெல்வதற்கும் முக்கிய பங்காற்றினர். அதன் பின் என்சிஏவில் இயக்குனராக இருந்த அவர் கடந்த 2021இல் சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இந்தியாவில் அசத்தலான செயல்பாடுகளின் பின்புலத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஜாம்பவான் வீரராக இருந்தாலும் ராகுல் டிராவிட் எப்போதுமே ஈகோ இல்லாதவர் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜாம்பவானாக இருந்தும் 2016இல் நியூசிலாந்துக்கு செல்ல விமானத்தில் பயணித்த போது தூங்கிக் கொண்டிருந்த தம்மிடம் சில ஆலோசனைகளை டிராவிட் கேட்ட பின்னணியை பகிர்ந்துள்ள அவர் இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் பாகிஸ்தானிலிருந்து நியூசிலாந்துக்கு பயணித்துக் கொண்டிருந்தோம். அதே விமானத்தில் இந்திய அண்டர்-19 அணியும் வந்தனர். அந்த அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சிள்ளதாக இருந்தார். மேலும் அந்த பயணத்தில் நான் 2 மணி நேரம் தூங்கினேன். ஆனால் அதுவரை பேசுவதற்காக காத்திருந்த அவர் நான் எழுந்ததும் “எப்படி நீங்கள் நிறைய கம்பேக் கொடுக்கிறீர்கள். எது உங்களை உத்வேகமடைய வைக்கிறது” என்று என்னிடம் கேட்டார்”

இதையும் படிங்க: நாளைய இலங்கை அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – 2 மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு

“குறிப்பாக அண்டர்-19 அணியின் பயிர்சாளராக இருப்பதால் கம்பேக் கொடுப்பதன் பின்னணியில் இருக்கும் உத்வேகத்தை இந்திய வீரர்களிடம் தெரிவிப்பதற்காக அதைப் பற்றி என்னிடம் டிராவிட் கேட்டார். இந்த வகையில் அவருக்கு எவ்விதமான ஈகோவும் இல்லை என்பதை சொல்ல வருகிறேன். அதாவது பெரிய கேரியரில் விளையாடி நிறைய மேடு பள்ளங்களை சந்தித்த அவர் எப்படி கடினமான சமயத்தில் கம்பேக் கொடுப்பது என்பதை என்னிடம் கற்றுக்கொள்ள விரும்பினார். இப்போதும் அப்படி கற்பதாலேயே அவர் இந்திய கிரிக்கெட்டில் இவ்வளவு உயரத்தில் இருக்கிறார்” என்று பாராட்டினார்.

Advertisement