நாளைய இலங்கை அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – 2 மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு

IND-vs-SL
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியானது அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்திய அணியானது நாளை நவம்பர் 2-ஆம் தேதி தங்களது ஏழாவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க காத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோன்று இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறக்கூடிய இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் பட்டியலை இங்கு காணலாம்.

அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது வெற்றிகளை குவித்து வருவதால் நாளைய போட்டியில் பெரிய அளவில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் குறிப்பிட்ட 2 மாற்றங்கள் நிகழ்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. ஹார்டிக் பாண்டியாவின் காயம் இன்னும் முழுவதுமாக குணமடையதால் அவர் நாளைய போட்டியில் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை.

- Advertisement -

ஆனால் மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பி வரும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இஷான் கிஷன் அந்த இடத்தில் பரிசோதிக்கப்பட ஒரு வாய்ப்பு உள்ளது. அதேபோன்று பந்துவீச்சு துறையில் தொடர்ச்சியாக விளையாடி வரும் முகமது சிராஜிக்கு ஒரு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் இணைந்தாலும் இணையலாம். இந்த இரண்டு மாற்றங்கள் தவிர வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இலங்கை அணிக்கு எதிரான நாளை போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து வீரர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பால் சோகம்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர்/இஷான் கிஷன், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) குல்தீப் யாதவ், 9) முகமது ஷமி, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்/ஷர்துல் தாகூர்.

Advertisement