33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து வீரர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பால் சோகம்

David Willey ENG
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அட்டகாசமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்த அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

இதனால் உலகக்கோப்பை வரலாற்றிலேயே ஒரு குறிப்பிட்ட தொடரில் 5 தோல்விகளை பதிவு செய்த முதல் நடப்பு சாம்பியன் என்ற மோசமான உலக சாதனையும் இங்கிலாந்து படைத்துள்ளது. அதனால் கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள்.

- Advertisement -

33 வயதிலேயே ஓய்வு:
இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பையுடன் ஒருநாள், டி20 உட்பட ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நட்சத்திர இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதிரடியான வேகத்தில் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து இதுவரை 113 போட்டிகளில் 145 விக்கெட்களை எடுத்துள்ளார்.

குறிப்பாக 2016 டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்களை (10) எடுத்த இங்கிலாந்து பவுலராக அசத்திய அவர் ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதைப்போல இந்த உலகக் கோப்பையிலும் 5 விக்கெட்டுகளையும் 42 ரன்கள் செயல்பட்டு வரும் அவர் இது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது பின்வருமாறு. “இந்த நாள் வர வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியதில்லை. ஏனெனில் சிறுவயதில் இருந்தே நான் இங்கிலாந்துக்காக விளையாடுவதை கனவாக கண்டேன்”

- Advertisement -

“எனவே கவனமாக சிந்தித்து பரிசளித்து இந்த உலகக் கோப்பையுடன் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் நான் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என்பதை மிகுந்த வருத்தத்துடன் உணருகிறேன். இதுவரை இங்கிலாந்து ஜெர்சியை நான் பெருமையுடன் நெஞ்சில் அணிந்து விளையாடினேன். மேலும் உலகத்தரம் மிகுந்த வீரர்கள் நிறைந்த இங்கிலாந்து அணியில் ஒரு பகுதியாக நானும் இருந்ததை நினைத்து பெருமையடைகிறேன்”

இதையும் படிங்க: என்னோட பரிசா அவரோட விக்கெட்டை எடுப்பேன்.. இந்தியாவை சாய்க்க பிளான் ரெடி.. நெதர்லாந்து வீரர் பேட்டி

“இந்த கால கட்டங்களில் நான் சில மறக்க முடியாத ஸ்பெஷல் நினைவுகளுடன் நல்ல நண்பர்களையும் சில கடினமான சூழ்நிலைகளையும் பெற்றுள்ளேன்” என்று கூறியுள்ளார். முன்னதாக அடிக்கடி காயத்தை சந்தித்து தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பு பெறாமல் இருந்த டேவிட் வில்லி ஓய்வுக்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லவில்லை. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக 33 வயதிலேயே அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்திருப்பார் என்பது இங்கிலாந்து ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement