தெ.ஆ டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார்? முக்கிய ஹிண்ட் கொடுத்த டிராவிட்

Rahul Dravid 2
- Advertisement -

செஞ்சூரியன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி துவங்குகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் 1992 முதல் இதுவரை சந்தித்த தோல்விகளை நிறுத்தி முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு தொடரை வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

இந்த தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இசான் கிசான் சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளதால் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற கேள்வி நிலவுகிறது. அந்த நிலையில் 2023 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக மிகச் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் இந்த தொடரிலும் களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

ராகுல் டிராவிட் பதில்:
ஆனாலும் 5 நாட்கள் நடைபெறக்கூடிய டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்வது கேஎல் ராகுல் போன்ற பகுதி நேர விக்கெட் கீப்பர்களுக்கு அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்ஜ், கேட்ச் ஆகியவற்றை பிடிப்பதில் கீப்பர்கள் ஒரு சிறிய தவறு செய்தாலும் அது வெற்றியையே பறிக்கும் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

அதனால் முழுநேர விக்கெட் கீப்பரான கேஎஸ் பரத் கீப்பிங் இத்தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இத்தொடரில் பேட்டிங்கில் அசத்தக்கூடிய கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது அணிக்காக சற்று வித்தியாசமானவற்றை செய்ய அவருக்கு கிடைத்த வாய்ப்பாகும். இஷான் இல்லாத இந்த சூழ்நிலையில் எங்களுக்கு விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய சில வீரர்கள் இருக்கின்றனர். அதை செய்வதற்கு ராகுல் நல்ல தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இந்த வேலையை அதிகம் செய்ததில்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்”

இதையும் படிங்க: பவுலிங் ஓகே.. ஆனா இந்த பேட்டிங்கை வெச்சுகிட்டு அவங்களால ஐபிஎல் ஜெயிக்க முடியாது.. ஏபிடி ஓப்பன்டாக்

“ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் கீப்பிங் செய்துள்ளார். அதுவும் சற்று கடினமாகும். கடந்த 5 – 6 மாதங்களாகவே அவர் கீப்பிங் வேலையை செய்துள்ளார். குறிப்பாக சுழல் பந்து வீச்சை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக செய்ததால் அந்த வேலை அவருக்கு எளிதாக இருந்தது. அந்த வரிசையில் இது எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். எங்களை பொறுத்த வரை பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகிய இரண்டிலும் அசத்தக்கூடிய அவரை போன்ற ஒருவர் இருப்பது நல்ல வசதியை கொடுக்கிறது” என்று கூறினார்.

Advertisement