பவுலிங் ஓகே.. ஆனா இந்த பேட்டிங்கை வெச்சுகிட்டு அவங்களால ஐபிஎல் ஜெயிக்க முடியாது.. ஏபிடி ஓப்பன்டாக்

AB De Villiers 22
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது. துபாயில் நடைபெற்ற அந்த ஏலத்தில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பை தொடர்களை வென்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேப்டன் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காகவும், மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் வாங்கப்பட்டனர்.

குறிப்பாக சுமார் 25 கோடிகள் என்ற வரலாறு காணாத உச்சகட்ட தொகைக்கு ஸ்டார்க்கை கொல்கத்தா வாங்கியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 10 வீரர்களை வாங்கிய கொல்கத்தா தங்களுடைய பவுலிங் கூட்டணியை வலுப்படுத்துவதற்காக முஜீப் உர் ரஹ்மான் போன்ற பவுலர்களை அதிகமாக வாங்கியது.

- Advertisement -

ஜெயிக்க முடியாது:
அந்த வகையில் பவுலிங் துறையை வலுப்படுத்த அதிக ஆர்வத்தை காட்டிய அந்த அணி பேட்டிங் துறையில் காலம் கடந்த மனிஷ் பாண்டேவை மட்டுமே புதிதாக வாங்கியது. இந்நிலையில் கொல்கத்தா அணியில் பவுலிங் மிகவும் அபாரமாக இருந்தாலும் பேட்டிங் வரிசை சிறப்பாக இல்லை என்று தென்னாபிரிக்க ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ரிங்கு சிங் ஆகியோரை தவிர்த்து நல்ல பேட்ஸ்மேன்கள் இல்லாத காரணத்தால் 2024 சீசனில் கொல்கத்தா கோப்பையை வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அவர்களின் பவுலிங் அட்டாக் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“இருப்பினும் அவர்களுடைய பலவீனம் பேட்டிங் துறையில் இருக்கிறது. அவர்களிடம் மோசமான பேட்ஸ்மேன்கள் இல்லை. ஆனால் அவர்களிடம் இருக்கும் பேட்டிங் வரிசை ஐபிஎல் தொடரை வெல்லக் கூடியதாக எனக்கு தெரியவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமான பேட்ஸ்மேன். அவர் டாப் ஆர்டரில் என்னை கவரக்கூடியவராக இருக்கிறார். ரிங்கு சிங் நல்ல ஃபினிஷராக வளர்ந்துள்ளார்”

இதையும் படிங்க: கஷ்டமா தான் இருக்கு.. ஆனா எதையும் மாற்ற முடியாது.. 2024 ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்து – ரிஷப் பண்ட் கருத்து

“அந்த வகையில் அவர்களுடைய பேட்டிங் வரிசை மோசமாக காட்சியளிக்கவில்லை. ஆனாலும் அவர்களுடைய பேட்டிங் வரிசை இந்த வருட ஐபிஎல் தொடரில் டாப் நான்கில் ஒன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடலில் கேகேஆர் தங்களுடைய பேட்டிங் துறையில் தான் தடுமாறுவார்கள் என்று நான் கருதுகிறேன்” என கூறினார். ஸ்ரேயாஸ், ரிங்கு ஆகியோரை தவிர்த்து கொல்கத்தா அணியில் நித்திஷ் ராணா, ரகமதுல்லா குர்பாஸ், அதிரடியாக விளையாடக்கூடிய ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement