கஷ்டமா தான் இருக்கு.. ஆனா எதையும் மாற்ற முடியாது.. 2024 ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்து – ரிஷப் பண்ட் கருத்து

Rishabh-Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கினார். அதன் காரணமாக படுகாயம் அடைந்த அவர் கடந்த ஓராண்டாகவே பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். மேலும் கிட்டதட்ட ஓராண்டாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருக்கும் அவர் மீண்டும் தனது கம்பேக்கிற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

இந்நிலையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான டெல்லி அணியில் அவர் விளையாடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் துபாயில் அண்மையில் நடைபெற்ற முடிந்த மினி ஏலத்தில் டெல்லி அணி நிர்வாகிகளுடன் அவரும் கலந்து கொண்டு வீரர்களை தேர்வு செய்வதில் தனது ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது துபாயிலேயே தங்கி நேரத்தை செலவிட்டு வரும் ரிஷப் பண்ட் தற்போது தோனியின் குடும்பத்தாருடன் விடுமுறை நாட்களை அங்கு கழித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து சில கருத்துக்களை பேசியுள்ள ரிஷப் பண்ட் கூறுகையில் :

வாழ்க்கையின் கடினமான காலகட்டத்தை நேர்மறையான எண்ணங்களுடன் எதிர்கொள்வது தான் சிறந்த வழி. எப்பொழுதுமே நாம் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். சோகமான விடயங்கள் நடந்தால் எந்த சூழலும் மாறாது. நடந்தவை எல்லாம் நடந்து விட்டது எனவே மகிழ்ச்சியாகவும் நல்ல மனநிலையிடம் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

- Advertisement -

கடந்த சில மாதங்களை விட தற்போது நான் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன். ஆனாலும் நான் இன்றளவும் 100% முழுஉடற்தகுதியை எட்டவில்லை. இருப்பினும் அடுத்த ஐபிஎல் தொடருக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதினால் அதற்குள் என்னுடைய முழு உடற்தகுதியை எட்டி விடுவேன் என்று பாசிட்டிவான பேட்டியை அளித்துள்ளார்.

இதையும் படிங்க : அஸ்வின் சந்தேகம்.. தெ.ஆ முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது 11 பேர் இந்திய அணியை தேர்வு செய்த கம்பீர்

இதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. அதோடு அவரால் முழுமையாக விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என்கிற காரணத்தினாலேயே டெல்லி அணி மினி ஏலத்தில் இளம் வீரரான குமார் குஷாராவை 7.20 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement