அஸ்வின் சந்தேகம்.. தெ.ஆ முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது 11 பேர் இந்திய அணியை தேர்வு செய்த கம்பீர்

Gautam Gambhir 8
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வெற்றி வாகை சூடியுள்ள இந்தியா வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் 1992 முதல் இதுவரை வென்றதில்லை. எனவே அந்த மோசமான வரலாற்றை இம்முறை இந்தியா மாற்றி சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அதற்கு நிகராக டிசம்பர் 26ஆம் தேதி துவங்கும் முதல் போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனெனில் பொதுவாக தங்களுடைய சொந்த மண்ணில் 3 சுழல் பந்து வீச்சாளர்கள் வரை இந்தியா விளையாடுவது வழக்கமாகும். ஆனால் தென்னாப்பிரிக்க மண்ணில் இருக்கும் மைதானங்களில் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ஆதிக்கத்தை செலுத்துவார்கள்.

- Advertisement -

கம்பீர் லெவன்:
அதனால் எவ்வளவு தான் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக இருந்தாலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதல் போட்டியில் ஜோடியாக விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் போட்டிக்கான தம்முடைய 11 பேர் கொண்ட இந்திய பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வு செய்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தன்னுடைய அணியை வெளியிட்டுள்ள அவர் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்திய ஜெய்ஸ்வால் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார். அதனால் 3வது இடத்தில் நீண்ட காலமாக விளையாடி வந்த புஜாராவுக்கு பதிலாக சுப்மன் கில் ஆடுவார் என்று தெரிவிக்கும் அவர் 4வது இடத்தில் நம்பிக்கை நாயகன் விராட் கோலியும் 5வது இடத்தில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுலையும் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 6வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்தெடுத்துள்ள அவர் ஸ்பின்னராகவும் ஆல் ரவுண்டராகவும் ரவீந்திர ஜடேஜா இருப்பார் என்று கூறியுள்ளார். இருப்பினும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை பார்த்து விட்டு ரவிச்சந்திரன் அஸ்வினை சந்தேகமாக 2வது ஸ்பின்னராக தம்முடைய அணியில் சேர்ப்பதாக தெரிவிக்கும் அவர் 2வது ஆல் ரவுண்டராக சர்துல் தாக்கூரையும் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முஹம்மது சிராஜ் ஆகியோரையும் தேர்ந்தெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய வீரர்களுக்கு அதை சொல்லிக் கொடுப்பது என் வேலையில்ல.. தெ.ஆ தொடருக்கு முன் டிராவிட் பேட்டி

முதல் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டிக்காக கௌதம் கம்பீர் தேர்வு செய்த இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெயஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் (கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா/ரவிச்சந்திரன் அஸ்வின், சர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முஹம்மது சிராஜ்

Advertisement