இந்திய வீரர்களுக்கு அதை சொல்லிக் கொடுப்பது என் வேலையில்ல.. தெ.ஆ தொடருக்கு முன் டிராவிட் பேட்டி

Rahul dravid
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2018க்குப்பின் வென்று சாதனை படைத்தது. இதை அடுத்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது.

அதில் சிறப்பாக விளையாடி வரலாற்றில் முதல் முறையாக தென்னாபிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. மேலும் இத்தொடரை வெல்வது 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு சமமான சரித்திர நிகழ்வாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர், ஸ்ரீசாந்த் போன்ற சில முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

வேலைக்கு ஆகாது:
இந்நிலையில் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்வியை நினைத்துக் கொண்டிருந்தால் அடுத்த போட்டிகளில் வெல்ல முடியாது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெம்புடன் பேசியுள்ளார். எனவே இத்தொடரில் சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்க வேண்டியது தம்முடைய வேலை இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி முதல் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு.

“ஆம் ஏமாற்றத்தை கொடுத்தாலும் கடந்த காலத்தில் நடைபெற்ற அதிலிருந்து நாங்கள் நகர்ந்தாக வேண்டும். தற்போது உங்களுக்கு முன்பாக புதிய இலக்கு இருக்கிறது. நாங்கள் குழந்தையாக இருந்ததிலிருந்தே தோல்வியில் இருந்து எப்படி முன்னோக்கி நகர வேண்டும் என்பதை வலுக்கட்டாயமாக கற்றுள்ளோம். ஒவ்வொரு முறையும் நீங்கள் அவுட்டாகும் போது மீண்டும் அசத்துவதற்கு 2வது இன்னிங்ஸ் காத்திருக்கும். எனவே கடந்த காலங்களில் சந்தித்த ஏமாற்றத்தை நீங்கள் உங்களுடனேயே வைத்துக் கொள்ள முடியாது”

- Advertisement -

“ஒருவேளை ஏமாற்றத்தை நீங்கள் வைத்திருந்தால் அது அடுத்த போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆம் நாங்களும் எங்களுடைய வீரர்களும் அதற்காக ஏமாற்றத்தை சந்தித்தனர். ஆனால் அதிலிருந்து நாங்கள் நகர்ந்து அடுத்ததாக காத்திருக்கும் சவாலை சந்திக்க தயாராகியுள்ளோம். மேலும் இந்தியாவுக்காக விளையாட எங்களின் எந்த வீரர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன்”

இதையும் படிங்க: விராட் கோலியிடம் இருந்து தான் அந்த விஷயத்தை கத்துக்கிட்டேன்.. வெளிப்படையாக பாராட்டிய – ரோஹித் சர்மா

“எங்களுடைய வீரர்கள் உத்வேகத்தை குறைவாக கொண்டிருக்கிறார்கள் என்றும் நான் கருதவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு வந்துள்ள நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். எனவே யாருக்கும் நான் உத்வேகத்தை கொடுக்க வேண்டும் என்று கருதவில்லை. பொதுவாக உத்வேகத்தை கொடுப்பதை விட நல்ல சூழல், சரியான செயல்பாடுகள், பயிற்சிகள் ஆகியவற்றை எங்களுடைய வீரர்களுக்கு கொடுப்பதையே நான் நம்புகிறேன். இது தான் ஒரு பயிற்சியாளராக எங்கள் வீரர்களை வெற்றிகரமாக செயல்பட வைப்பதற்கான என்னுடைய வேலையாகும்” என்று கூறினார்.

Advertisement