அவசர அவசரமாக பிளைட் பிடிச்சி பெங்களூரு வந்த கோச் டிராவிட். நாளைக்கு மேட்ச் இருக்கு – இப்போ என்ன ஆச்சி?

Rahul-Dravid
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

IND vs SL

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இன்று அதிகாலை பெங்களூரு பயணித்துள்ளார்.

- Advertisement -

நேற்று அதிகாலையில் அவர் விமானத்தில் பயணித்த சில புகைப்படங்களை ரசிகர் ஒருவர் வெளியிட இப்படி ராகுல் டிராவிட் திடீரென ஃபிளைட் பிடித்து பெங்களூருக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அதேபோன்று இந்திய அணியின் நிர்வாகமும் ராகுல் டிராவிட் பெங்களூர் சென்றுள்ளார் என்று உறுதி செய்துள்ளது.

மேலும் அவர் இந்த மூன்றாவது போட்டி துவங்கும் முன்னர் மீண்டும் அணிக்கு திரும்பி விடுவார் என்றும் கட்டாயம் ஞாயிற்றுக்கிழமை அவர் திருவனந்தபுரத்தில் அணி வீரர்களுடன் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் டிராவிடுக்கு என்ன ஆனது? அவர் ஏன் திடீரென பெங்களூரு பயணித்தார் என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.

- Advertisement -

இருப்பினும் தற்போது டிராவிடுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சொந்த காரணங்களுக்காகவும் அவர் பெங்களூருக்கு சென்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டாவது போட்டி முடிந்து தனது உடலில் அசோகரித்தையை உணர்ந்த டிராவிட் சற்று உடல் நலக்குறைவாக இருந்ததால் பர்சனல் செக்கப்பிற்காகவே அவர் பெங்களூர் பயணித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சூர்யாவை பார்க்கும் போது 80களில் பவுலர்களை தெறிக்க விட்ட ரிச்சர்ட்ஸ் மாதிரியே இருக்கு – ஆஸி ஜாம்பவான் வீரர் பாராட்டு

எது எப்படி இருப்பினும் கட்டாயம் அவர் மூன்றாவது போட்டியின் போது அணி வீரர்களுடன் இருப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை ஜனவரி 15 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement