சூர்யாவை பார்க்கும் போது 80களில் பவுலர்களை தெறிக்க விட்ட ரிச்சர்ட்ஸ் மாதிரியே இருக்கு – ஆஸி ஜாம்பவான் வீரர் பாராட்டு

- Advertisement -

மும்பையை சேர்ந்த கிரிக்கெட் சூரியகுமார் யாதவ் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டும் பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இருப்பினும் மனம் தளராமல் போராடி கடந்த 2021ஆம் ஆண்டு தாமதமாக 30 வயதில் அறிமுகமான அவர் அந்த வாய்ப்புகளை வீணடிக்காமல் பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் அதிரடி சரவெடியாக மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு விரைவாக ரன்களை சேர்த்து இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்று கொடுத்தார்.

SUryakumar Yadav 112

- Advertisement -

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி உள்ளிட்ட இதர வீரர்களை மிஞ்சி அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்த அவர் குறுகிய காலத்திலேயே ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முந்தி சாதனை படைத்தார். மேலும் பெரும்பாலான போட்டிகளில் எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்ற வகையில் யாராலும் நினைத்து பார்க்க முடியாத வித்தியாசமான புதுப்புது ஷாட்டுகளை பயன்படுத்தி அதிரடியான சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் விழுந்து விழுந்து அடித்ததை பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்கள்.

ரிச்சர்ட்ஸ் மாதிரி:
அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களும் ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்களும் அழைக்க துவங்கிய அவரை விரைவில் என்னையும் மிஞ்சி விடுவீர்கள் என்று தெனாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் மனதார பாராட்டினார். மேலும் ஓப்பனிங் இடத்திலேயே தடவலாக செயல்படும் வீரர்களுக்கு மத்தியில் மிடில் ஆர்டரில் 180+ கேரியர் ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ள அவர் அதற்குள் 3 சதங்களை அதுவும் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி வருகிறார்.

richards

அப்படி அட்டகாசமாக செயல்படும் அவரை கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நட்சத்திரங்களை முந்தி டி20 கிரிக்கெட்டில் உலகின் புதிய யுனிவர்சல் பாஸ் என்றும் சச்சின், ரிச்சர்ட்ஸ், விராட் கோலி வரிசையில் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டும் வரும் தலைசிறந்த வீரர் என்றும் கபில் தேவ் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டினார்கள். இந்நிலையில் இளம் வீரராக தாம் இருந்த போது உலகின் அத்தனை தரமான பவுலர்களையும் அசால்டாக அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் போலவே தற்போது சூரியகுமார் யாதவ் செயல்பட்டு வருவதாக முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் டாம் மூடி பாராட்டியுள்ளார்.

- Advertisement -

“சூரியகுமார் யாதவ். அவர் விளையாடும் விதத்தை பார்க்கும் நமக்கு மூச்சடைக்க வைக்கிறது. அவரை பார்க்கும் போது நான் இளம் கிரிக்கெட் வீரராக இருந்த போது விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற மகத்தானவரை பார்த்தது எனக்கு மிகவும் நினைவூட்டுகிறது. அவர் ஒட்டுமொத்த போட்டியையும் தனி ஒருவனாக தன்னுடைய கட்டுக்குள் வைக்கும் வீரராக அற்புதமாக செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல உலகிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி என்னும் வார்த்தையை முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் தான் அறிமுகப்படுத்தினார் என்று சொல்லலாம். ஏனெனில் பந்து வீச்சாளர்கள் ராஜாங்கம் நடத்திய 80களிலேயே பெரும்பாலான போட்டிகளில் குறைவான பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடி எப்படி போட்டாலும் பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் இப்போதும் சச்சின், பாண்டிங், சேவாக் ஆகியோரை காட்டிலும் அதிரடியாக விளையாடியதில் தனக்கென்று தனி முத்திரையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ: மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தான், பாபர் அசாம் புது ரகமான பரிதாப ஹாட்ரிக் உலக சாதனை – கலாய்க்கும் ரசிகர்கள்

தற்போது அவரைப்போலவே சூரியகுமார் விளையாடி வருவதாக டாம் மூடி மனதார பாராட்டியுள்ளார். அப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் சூரியகுமார் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாகவும் முன்னேறியுள்ள நிலையில் அடுத்ததாக பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான டெஸ்ட் அணியில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement