அப்படி தான் ஆடணும்ன்னு அவசியமில்ல.. தெ.ஆ தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு டிராவிட் அட்வைஸ்

Rahul Dravid 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரை விட 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றதில்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் குறைந்தபட்சம் ஒரு தொடரை வென்றுள்ள இந்தியா கடைசியாக தென்னாபிரிக்காவில் 2010ஆம் ஆண்டு தோனி தலைமையில் கடுமையாக போராடி 1 – 1 (3) என்ற கணக்கில் சமன் மட்டுமே செய்தது.

- Advertisement -

டிராவிட் ஆலோசனை:
எனவே இம்முறை அந்த மோசமான வரலாற்றை மாற்றுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியினர் களமிறங்க உள்ளனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்கள் உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலானது என்று ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

எனவே நீண்ட நேரம் பேட்டிங் செய்வதே அங்கு வெற்றி காண்பதற்கு வழி என்று தெரிவிக்கும் அவர் அதற்காக இந்திய பேட்ஸ்மேன்கள் எதையும் பின்பற்றாமல் தங்களுடைய ஸ்டைலில் வெற்றி காண்பதற்கு தேவையான பங்களிப்பை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலான இடம் என்று புள்ளி விவரங்கள் சொல்லும்”

- Advertisement -

“குறிப்பாக செஞ்சூரியன், ஜோஹன்ஸ்பர்க் போன்ற மைதானங்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். அங்குள்ள பிட்ச்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதில் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட விரும்புவார்கள். அங்கே நீண்ட நேரம் நின்று கடைசி வரை பேட்டிங் செய்யும் முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும்”

இதையும் படிங்க: அவரெல்லாம் எனக்கு தூசி மாதிரி.. நட்சத்திர இந்திய வீரர் பற்றி.. இந்திய ரசிகரிடம் ஜான்சன் பதிலடி

“இருப்பினும் அனைவரும் அதே வழியில் விளையாட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அங்கே ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன வருமோ அதை சிறப்பாக செயல்படுத்துவதை நாங்கள் விரும்புகிறோம். தென்னாப்பிரிக்கா சென்றதும் எங்களுடைய வீரர்கள் பயிற்சிகளை துவங்குவார்கள். இத்தொடரில் நன்கு செட்டிலாகி போட்டியை வெல்லும் அளவுக்கு உங்களுடைய பங்கை கொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய வலியுறுத்தலாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement