ஜெய்ஸ்வால் செய்த தவறால் ஆட்டமிழந்த சுப்மன் கில். அதிருப்தியை வெளிப்படுத்திய கோச் டிராவிட் – நடந்தது என்ன?

Gill
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது முதலில் அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில் இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அதனை தொடர்ந்து இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மிக முக்கியமான போட்டியானது நேற்று ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.

- Advertisement -

இருப்பினும் இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய சுப்மன் கில்லின் செயல்பாடு பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது டக் அவுட்டான அவர் நேற்றைய போட்டியில் 6 பந்துகளை சந்தித்து 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி சுப்மன் கில் ஆட்டமிழந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக ஜெய்ஸ்வால் செய்த சிறிய தவறும் காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்த போட்டியின் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி இன்னிங்க்ஸை மிகச் சிறப்பாக துவங்கிய சுப்மன் கில் பெரிய ரன் குவிப்பிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கேஷவ் மகராஜ் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தினை ஸ்வீப் சாட் அடிக்க நினைத்து பந்தை தவறவிட்டார். அப்படி அவர் தவறவிட்ட பந்து கால் பகுதியில் பட்டதுமே மகாராஜ் அம்பயரிடம் அவுட் கேட்க அம்பயரும் அவுட் என்று அறிவித்தார்.

- Advertisement -

இருப்பினும் தனது விக்கெட்டில் சந்தேகம் இருந்ததால் எதிரில் இருந்த தனது பார்ட்னர் ஜெய்ஸ்வாலிடம் சென்று நான் அவுட் தானா? ரிவ்யூ கேட்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெய்ஸ்வாலோ பந்து நேராக ஸ்டம்பை தாக்கியிருக்கும் நிச்சயம் நீங்கள் அவுட் தான். அதனால் ரிவியுவை இழக்க வேண்டாம் என்று அவரை அனுப்பி வைத்தார். அதனால் சுப்மன் கில் அதிருப்தி அடைந்தவாறு வெளியேறினார்.

இதையும் படிங்க : காயத்தால் தெ.ஆ டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவீங்களா? ஷமி சொன்ன குழப்பமான பதில்

பின்னர் வெளியான ரீப்ளேவில் பந்து லெக் ஸ்டம்பை தாண்டி சென்றது தெளிவாக தெரியவந்தது. ஒருவேளை கில் ரிவ்யூ கேட்டிருந்தால் நிச்சயம் அந்த விக்கெட்டில் இருந்து தப்பித்திருப்பார் என்று தெரிந்தது. இதனை கவனித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் களத்திலேயே அதிருப்தி அடைந்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அப்படி அவர் அதிருப்தி அடைந்து தனது கோபத்தை வெளிக்காட்டியதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

Advertisement