காயத்தால் தெ.ஆ டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவீங்களா? ஷமி சொன்ன குழப்பமான பதில்

Mohammed Shami 3
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 1 – 1 (3) என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. இதைத் தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலும் அதன் பின் நடைபெறும் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்தியா களமிறங்க உள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் குறைந்தபட்சம் ஒரு தொடரையாவது வென்றுள்ள இந்தியா 1992 முதல் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது.

- Advertisement -

ஷமியின் பதில்:
இந்த சூழ்நிலை இத்தொடரிலிருந்து காயத்தால் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலக உள்ளார் என்ற செய்தி நேற்று வெளியானது. அதாவது 2023 உலகக் கோப்பையிலேயே லேசான முழங்கால் காயத்துடன் விளையாடிய அவர் இன்னும் அதிலிருந்து குணமடையாததால் இத்தொடரிலிருந்து விலகுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்பஸ் இணையத்தில் செய்திகள் வெளியானது.

ஆனால் 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இத்தொடரில் இருந்து வெளியேறுவது கண்டிப்பாக மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்நிலையில் தம்முடைய காயத்தால் வலி எதுவுமில்லை என்றால் கண்டிப்பாக தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடுவேன் என்று ஷமி கூறியுள்ளார்.

- Advertisement -

நீண்ட காலமாக இருந்து வரும் இந்த காயம் தம்மை மீண்டும் தொல்லை செய்யாமல் இருக்கும் பட்சத்தில் இந்தியாவுக்காக கண்டிப்பாக விளையாடுவேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய தொலைக்காட்சி பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நான் தென்னாப்பிரிக்கா செல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு வலி இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் நீண்ட காலமாகவே என்னுடைய முழங்காலில் ஒரு சிறிய வலி இருந்து கொண்டே இருக்கிறது”

இதையும் படிங்க: காயத்தால் தெ.ஆ டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவீங்களா? ஷமி சொன்ன குழப்பமான பதில்

“அதனால் அதை தற்போது மீண்டும் மருத்துவர்களிடம் சோதனை செய்ய வேண்டும். எனவே தற்சமயத்தில் அது என்னை தொல்லை செய்யாமல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நான் டெஸ்ட் தொடரில் விளையாட செல்வேன். அதே போல 2024 டி20 உலகக் கோப்பைக்கும் நான் தயாராக இருக்கிறேன். அதில் கடந்த முறை தவறுகளை நான் செய்யாமல் இருந்து வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பேன்” என்று கூறினார்.

Advertisement