ரோஹித், கோலி போன்ற மொத்த இந்திய வீரர்களையும் முந்திய சூரியகுமார்.. தனித்துவ சாதனை

- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தை துவங்கியுள்ளது. அதற்காக நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடிய 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

அதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற தொடரை 1 – 1 (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. குறிப்பாக ஜோஹன்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் சூரியகுமார் யாதவ் 100 (56), ஜெய்ஸ்வால் 60 (41) ரன்கள் எடுத்த உதவியுடன் 202 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

- Advertisement -

சூரியகுமாரின் சாதனை:
அதை துரத்திய தென்னாப்பிரிக்காவை 95 ரன்களுக்கு சுருட்டி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். முன்னதாக இப்போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து தம்முடைய கேரியரில் 4 சதங்கள் அடித்துள்ள சூரியகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ரோகித் சர்மா மற்றும் கிளன் மேக்ஸ்வெல் (தலா 4) உலக சாதனையை சமன் செய்தார்.

அதை விட 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நாட்டிங்காம் நகரில் முதல் முறையாக 117 (55) ரன்கள் விளாசி சதமடித்த அவர் 2022 நவம்பர் மாதம் நியூசிலாந்து மண்ணில் மௌன்ட் மவுங்கனி நகரில் 111* (51) ரன்கள் விளாசி 2வது சதத்தை அடித்தார். அதை தொடர்ந்து 2023 ஜனவரியில் இலங்கைக்கு எதிராக இந்தியாவின் ராஜ்கோட் நகரில் 112* (51) ரன்கள் விளாசி 3வது சதத்தை அடித்த அவர் நேற்று தென்னாப்பிரிக்க மண்ணில் 4வது சதத்தை அடித்தார்.

- Advertisement -

அதாவது சேனா நாடுகள் எனப்படும் ஆசிய கண்டத்திற்கு வெளியே மிகவும் சவால் மிகுந்த நாடுகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 4 நாடுகளில் சூரியகுமார் 3 டி20 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வரலாற்றின் இதர அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களையும் மிஞ்சியுள்ள சூரியகுமார் யாதவ் சேனா நாடுகளில் அதிக சதங்கள் (3) அடித்த இந்திய வீரராக சூரியகுமார் தனித்துவ சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் ஜிதேஷ் சர்மா மாதிரியே ஹிட் விக்கெட் ஆன 4 இந்திய வீரர்கள் பற்றி தெரியுமா? – விவரம் இதோ

அவரை தவிர்த்து சேனா வெளிநாடுகளில் நடைபெற்ற டி20 போட்டிகளில் 2 இந்திய வீரர்கள் மட்டுமே (ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் தலா 1) சதங்கள் அடித்துள்ளனர். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் தம்மை அடித்துக் கொள்ள முடியாது என்ற வகையில் சூரியகுமார் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement