டி20 கிரிக்கெட்டில் ஜிதேஷ் சர்மா மாதிரியே ஹிட் விக்கெட் ஆன 4 இந்திய வீரர்கள் பற்றி தெரியுமா? – விவரம் இதோ

Jitesh-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டிசம்பர் 14-ஆம் தேதி (நேற்று) ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் போட்டியின் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்க வீரர் வீசிய பந்தினை ஓங்கி அடித்த ஜிதேஷ் சர்மா காலை ஸ்டம்பில் இடித்து பரிதாபமான முறையில் ஆட்டமிழந்தார்.

அப்படி அவர் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்று இருந்தாலும் அவர் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. நேற்றைய போட்டியில் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்த ஜிதேஷ் சர்மா வெறும் நான்கு ரன்களை மட்டுமே எடுத்திருந்த வேளையில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

இப்படி இவர் ஹிட் விக்கெட் ஆனதற்கு பிறகு இவரை போன்று சில இந்திய வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட்டானது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜிதேஷ் சர்மாவிற்கு முன்னதாக நான்கு இந்திய வீரர்கள் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்துள்ளனர். அவர்கள் குறித்த விவரத்தை தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். அந்த வகையில் முதல் முதலாக டி20 கிரிக்கெட்டில் கே.எல் ராகுல் கடந்த 2018-ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற டி20 போட்டியில் இலங்கை அணிக்கெதிராக அவர் ஹிட் விக்கெட் ஆனார்.

- Advertisement -

அதன்பிறகு கடந்த 2021-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது இந்திய அணியின் மிதவேகப்பந்து வீச்சாளரான ஹர்சல் பட்டேல் ஹிட் விக்கெட்டானார். அவருக்கு அடுத்து கடந்த 2022-ஆம் ஆண்டு அடிலெய்டு நகரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஹார்டிக் பாண்டியா ஹிட் விக்கெட்டானார்.

இதையும் படிங்க : இனிமே இதை யாரும் யூஸ் பண்ணக்கூடாது.. அது தோனிக்கு மட்டும் தான் சொந்தம் – பி.சி.சி.ஐ அளித்த கவுரவம்

அதற்கு அடுத்து அதே ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டியின் போது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஷ்ரேயாஸ் ஐயர் ஹிட் விக்கெட் ஆகியிருந்தார். இப்படி நான்கு வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்துள்ள வேளையில் நேற்று ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சார்பாக 5 ஆவது வீரராக ஜிதேஷ் சர்மா ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து குறிப்பிடத்தக்கது.

Advertisement