இனிமே இதை யாரும் யூஸ் பண்ணக்கூடாது.. அது தோனிக்கு மட்டும் தான் சொந்தம் – பி.சி.சி.ஐ அளித்த கவுரவம்

Dhoni-and-BCCI
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2019-ஆம் ஆண்டு வரை 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10773 ரன்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்களையும், 98 டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்களையும் குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தாலும் 42 வயதாகும் தோனி இன்றளவும் சென்னை அணியின் கேப்டனாக பயணித்து வருகிறார். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவரது தலைமையிலான சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை கௌரவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அவருக்கு மிகப்பெரிய கௌரவத்தினை வழங்கியுள்ளது.

அந்த வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய ஜெர்சியை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என நம்பர் 10-க்கு அதிகாரபூர்வமாக பி.சி.சி.ஐ ஓய்வினை வழங்கியிருந்தது. அதனை தொடர்ந்து இந்திய வீரர்களில் இரண்டாவதாக தற்போது தோனியின் 7-ஆம் ஜெர்சியை இனிவரும் வீரர்கள் யாரும் பயன்படுத்தக்கூடாது என கூறி 7-ஆம் நம்பருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்திய அணிக்காக மூன்று விதமான உலகக் கோப்பைகளையும் பெற்று தந்த மகத்தான கேப்டனான தோனி இந்திய அணிக்காக ஆற்றிய மகத்தான பங்களிப்பினை கௌரவிக்கும் விதமாக அவரது ஜெர்சி நம்பரை இனி யாரும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சூரியகுமாரை விரைவாக கட்டுப்படுத்தி அவுட்டாக்க பவுலர்களுக்கு ஜஹீர் கான் கொடுத்த ஆலோசனை

கபில் தேவிற்கு பிறகு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற தோனி டி20 உலக கோப்பை, சாம்பியன்ஷிப் என அனைத்து விதமான ஐ.சி.சி கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்று தந்தவர். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பின் காரணமாகவே அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement