சூரியகுமாரை விரைவாக கட்டுப்படுத்தி அவுட்டாக்க பவுலர்களுக்கு ஜஹீர் கான் கொடுத்த ஆலோசனை

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அந்த வகையில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே சூரியகுமார் யாதவ் தலைமையில் வலுவான தென்னாப்பிரிக்காவிடம் அடங்க மறுத்த இளம் இந்திய அணி கோப்பையை பகிர்ந்து கொண்டு தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது.

முன்னதாக ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100, ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்த உதவியுடன் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா சுமாராக விளையாடி 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

- Advertisement -

ஜஹீர் கானின் ஆலோசனை:
அதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை சாய்த்தார். இருப்பினும் பேட்டிங்கில் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 (56) ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு பெரும்பாலானவர்களின் விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொண்டு வரும் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் அதற்கு நேர்மாறாக அறிமுகமானது முதலே எதிரணிகள் எப்படி பந்து வீசினாலும் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அதனால் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ள அவர் இத்தொடரில் கேப்டனாக முன்னின்று இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஒருபுறமாக ஃபீல்டர்களை நிறுத்தி ஒருபக்கமாக பந்து வீசுவதே சூரியகுமாரை அவுட்டாக்க ஒரே வழி என செய்தியாளரின் கேள்விக்கு ஜஹீர் கான் பதிலளித்துள்ளார். இது பற்றி கிரிக்ஸ்ஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் தனக்கான பெயரை உருவாக்கி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கும் திறமையை கொண்டிருப்பதால் அவருக்கு எதிராக பவுலர்கள் தடுமாறுகிறார்கள்”

இதையும் படிங்க: 4, 6, 6, 6, 6.. ஒரே ஓவரில் 28 ரன்ஸ் வெளுத்த போவல்.. 63/4 டூ 176/7.. இங்கிலாந்தை வீழ்த்திய வெ.இ முன்னிலை

“இருப்பினும் பிட்ச்சின் ஒரு பக்கமாக வீசும் போது ஃபீல்டர்கள் இருப்பார்கள் என்பதால் டி20 கிரிக்கெட்டில் அவரை அவுட்டாக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கும். ஆனாலும் லாங் ஆன், மிட் விக்கெட், கவர்ஸ் திசைக்கு மேல் என பந்தின் வேகத்தை பயன்படுத்தி பேட்டின் வேகத்தை திறந்து சூர்யா அடிப்பதால் பவுலர்கள் தடுமாறுகின்றனர். எனவே நல்ல பந்துகளை வீசி அவரை அவுட்டாக்கும் வாய்ப்பை நீங்களே பெற வேண்டும். அதுவே அவரை தடுப்பதற்கான ஒரே வழியாகும். அது தான் இப்போட்டியின் இறுதியில் நடந்தது” என்று கூறினார்.

Advertisement