ஆசியக்கோப்பை 2023 : முதல் 2 போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் விலகல் – ராகுல் டிராவிட் அதிகாரபூர்வ அறிவிப்பு

Rahul-Dravid
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ரோஹித் சர்மாவின் தலைமையில் 17 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பைத் தொடரானது நடைபெற உள்ளதால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்டு வந்து இடம் பிடித்திருந்த கே.எல் ராகுல் கடந்த ஒரு வாரமாக ஆலூரில் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

- Advertisement -

ஆனால் தற்போது வெளியான தகவலின் படி கே.எல் ராகுல் நன்றாக இருந்தாலும் ஆசிய கோப்பை தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான் பி.சி.சி.ஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து டிராவிட் கூறுகையில் : கே.எல் ராகுல் கடந்த ஒரு வாரமாக எங்கள் அணியுடன் இணைந்து நன்றாகவே பயிற்சி செய்து வந்தார். ஆனாலும் அவரால் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் விளையாட முடியாது என்று டிராவிட் கூறியுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த வாரம் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கே.எல் ராகுல் குறித்து பேசுகையில் கூறியதாவது : கே.எல் ராகுல் தற்போது காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார். ஆனாலும் அவருக்கு சிறிய தசை பிடிப்புகள் இருக்கின்றன. எனவே பிசியோ என்ன சொல்கிறாரோ அதை பொறுத்துதான் கே.எல் ராகுல் அணியில் விளையாடுவார் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : ஃபார்மில் இருக்கும் அவர கழற்றி விட்டு கேஎல் ராகுலை சேர்த்த உங்களை பாகிஸ்தான் தோற்கடிக்கும் – டேனிஷ் கனேரியா அதிரடி

அடுத்ததாக கே.எல் ராகுல் இன்னும் சில தினங்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் நிச்சயம் அவர் முதல் இரண்டு போட்டிகளுக்கு பிறகு முழுஉடற்தகுதியுடன் இலங்கை சென்று ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement