ஃபார்மில் இருக்கும் அவர கழற்றி விட்டு கேஎல் ராகுலை சேர்த்த உங்களை பாகிஸ்தான் தோற்கடிக்கும் – டேனிஷ் கனேரியா அதிரடி

Danish Kaneria KL Rahul
- Advertisement -

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. விரைவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராக உதவும் தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையில் 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நம்பர் 4வது பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் பிரச்சனையை தீர்த்து இந்திய அணியை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இத்தொடரில் மணிக்கட்டு ஸ்பின்னரான யுஸ்வேந்திர சஹால் தேர்வு செய்யப்படாததற்கு நிறைய முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதே போல ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சுமாராக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் நேரடியாக இந்த அணியில் தேர்வாகியுள்ளதும் சஞ்சு சாம்சன் வெறும் பேக்-அப் வீரராக மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் விமர்சனங்களை எழுப்பியது.

- Advertisement -

பாகிஸ்தான் வெல்லும்:
இந்நிலையில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாததால் நல்ல ஃபார்மில் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார். மேலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமாகி அற்புதமான ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வாலை ஏற்கனவே தடவலாக செயல்பட்டு சுமாரான ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள இந்திய அணியை இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்றும் அவர் அதிரடியாக பேசியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் ஜெய்ஸ்வால் தம்முடைய மிகச் சிறப்பான திறமைகளை காண்பித்தார். ஆனாலும் நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை நீங்கள் நீக்கியுள்ளீர்கள். அதே போல சஞ்சு சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தவறி விட்டார். இருப்பினும் ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் போன்றவரை நீக்கியுள்ள நீங்கள் காயத்திலிருந்து குணமடைந்து வந்து விட்டார்கள் என்பதற்காக எந்த விதமான போட்டிகளிலும் விளையாடாத கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்”

- Advertisement -

“இந்த நிலைமையில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நல்ல போட்டியாக அமையும். அதில் பாகிஸ்தான் சற்று அதிக சமநிலைக் கொண்ட அணியாக இருக்கிறது. மேலும் நாக் அவுட் சமயங்களில் இந்தியா சுமாராக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. மறுபுறம் பாபர், இமாம் உல் ஹக் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க:வீடியோ : என்னையா டீம்ல எடுக்க மாட்றீங்க. 40 பந்தில் 101 அடித்து வெறித்தனத்தை காட்டி – விராட் கோலிக்கு மறைமுக சிக்னல்

“ஆனால் இந்திய அணியில் பும்ரா, ராகுல், ஸ்ரேயாஸ் ஆகியோர் காயத்திலிருந்து கம்பேக் கொடுக்கிறார்கள். அதே போல ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ச்சியாக அசத்துவதில்லை. எனவே இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement