கொரோனாவில் இருந்து மீண்ட ராகுல் டிராவிட். எப்போது அணியுடன் இணைகிறார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு

Dravid-1
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசியக்கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டபோது கே.எல் ராகுல் தலைமையிலான மற்றொரு இந்திய அணியானது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. அந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் லட்சுமணன் இந்திய அணியுடன் பயணித்திருந்தார். ஆசியக் கோப்பை தொடருக்காக தயாராகும் வகையில் இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் டிராவிட்க்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

Dravid Rishabh Pant

- Advertisement -

இந்நிலையில் டிராவிடுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்த வேளையில் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படும் சில தினங்களுக்கு முன்னதாக டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியுடன் டிராவிட் பயணிக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் காரணமாக ஜிம்பாப்வே தொடரை முடித்த கையோடு வி.வி.எஸ் லட்சுமணன் தற்காலிக இந்திய அணியின் பயிற்சியாளராக ஆசிய கோப்பை தொடரிழும் இந்திய அணியுடன் தொடர்வார் என்றும் டிராவிடுக்கு கொரோனா தொற்று குணமடைந்ததும் அவர் இந்திய அணியுடன் இணைவார் என்றும் பி.சி.சி.ஐ தரப்பில் கூறப்பட்டது.

dravid

இந்நிலையில் தற்போது லக்ஷ்மணன் தலைமையில் துபாயில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய அணியானது இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான டிராவிடுக்கு கொரோனா தொற்று ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளதால் அவர் மீண்டும் இந்திய அணியுடன் இணைகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட லட்சுமணன் விரைவில் நாடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ யின் மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்த டிராவிட் மீண்டும் தற்போது கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி சனிக்கிழமை இரவு துபாய் சென்று அணி வீரர்களுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய 5 மறக்க முடியாத தருணங்கள்

ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் வேளையில் டிராவிட் இந்திய அணிக்கு வந்துள்ள மீண்டும் திரும்பி உள்ளது அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாகிஸ்தான் போட்டிக்கு அடுத்து இந்த ஆசிய கோப்பை தொடர் முழுவதுமே அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட தயாராகிவிட்டார்.

Advertisement