தோனி மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோரை பின்பற்றி ரிங்கு சிங் அந்த விஷயத்தை சாதிப்பார் – ரஹ்மனுல்லா குர்பாஸ் கருத்து

Gurbaz-and-Rinku
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக மிகச்சிறந்த பினிஷர்களாக செயல்பட்ட தோனி மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோர் நீண்ட காலமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்கள். அவர்கள் இருவருடைய தனிப்பட்ட திறன் மற்றும் பாட்னர்ஷிப் என இரண்டையும் வைத்து பல ஆண்டுகள் இந்திய அணியின் வெற்றிக்காக இருவருமே கை கொடுத்துள்ளனர்.

போட்டியின் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழும் பொழுது கூட கடைசிவரை நின்று அணிக்கு வெற்றி தேடி தருவதில் புகழ்பெற்ற வீரர்களாக இருந்த தோனி மற்றும் யுவ்ராஜ் சிங் திகழ்ந்து வந்தனர். அவர்களுக்கு பிறகு பெரிய அளவில் இந்திய அணியில் ஃபினிஷர்கள் கிடைக்காமல் இருந்து வந்தனர்.

- Advertisement -

சமீபத்தில் ஹர்திக் பாண்டியா பினிஷராக பார்க்கப்பட்டு வந்தாலும் அவரால் பெரும்பாலான போட்டிகளில் இறுதிவரை களத்தில் நிற்க முடியவில்லை. அதேபோன்று காயம் காரணமாகவும் அடிக்கடி வெளியேறி வருகிறார். அந்த நிலையில் தான் இந்திய அணிக்கு ஒரு பிராப்பரான ஃபினிஷராக ரிங்கு சிங் அறிமுகமானார்.

அப்படி அறிமுகமாகியதிலிருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிங்கு சிங் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் தனது இடத்தை உறுதி செய்து விட்டார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு அவரது ஆட்டம் பிரமாதமாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ரிங்கு சின் குறித்து பேசியுள்ள ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரரான குர்பாஸ் கூறுகையில் : ரிங்கு சிங் ஒரு நல்ல கிரிக்கெட்டர் என்பது மட்டும் இன்றி அவர் ஒரு நல்ல ஃபினிஷர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவரிடம் இருக்கும் ஸ்பெஷல் என்னவென்றால் மற்ற வீரர்கள் அவரது இடத்தில் இறங்கும்போது அடிக்க முயல்கிறார்கள் ஆனால் ரிங்கு சிங் பந்தை பார்த்து அதற்கு ஏற்றார் போன்று விளையாடுகிறார்.

இதையும் படிங்க : மோதி பாப்போம்.. இங்கிலாந்திடம் பஸ்பால் இருந்தா.. எங்கிட்ட அந்த பால் இருக்கு.. கவாஸ்கர் பேட்டி

அவர் ஒரு புத்திசாலி கிரிக்கெட்டர் எனவே விரைவாகவே அவரால் கண்டிஷனை புரிந்து கொண்டு சிறப்பாக விளையாட முடிகிறது. மேலும் தோனி, யுவராஜ் சிங் ஆகியோரது பாரம்பரியத்தை நிச்சயம் ரிங்கு சிங்கால் முன்னெடுத்துச் செல்ல முடியும். இந்திய அணிக்காக அவர் ஒரு மிகச் சிறப்பான பினிஷராக இனிவரும் காலங்களில் திகழுவார் என குர்பாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement